Translate Tamil to any languages.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தமிழைப் பாடு


உலகம் போற்றும் தாய்மொழி தமிழே
பலரும் ஏற்கும் தேன்மொழி தமிழே
(
உலகம்)
முதன்முதல் மொழியும் எங்களின் தமிழே
பழம்பெரும் மொழியும் எங்களின் தமிழே
(
முதன்முதல்)
ஈராறாகும் உயிரும் வந்திடும் தமிழிலே
உயிரீறாம் ஆயுதம் வந்திடும் தமிழிலே
மூவாறாம் மெய்யும் வந்திடும் தமிழிலே
பெருக்கிடும் உயிர்மெய் வந்திடும் தமிழிலே
(
உலகம்)
(
முதன்முதல்)
எழுத்தது இலக்கணம் இருப்பது தமிழிலே
பாடலது இலக்கணம் இருப்பது தமிழிலே
பொருளது இலக்கணம் இருப்பது தமிழிலே
அறமது இலக்கணம் இருப்பது தமிழிலே
(
உலகம்)
(
முதன்முதல்)
வாழ்க்கையும் உரைத்திடும் இலக்கியம் தமிழிலே
ஒழுக்கமும் விளக்கிடும் இலக்கியம் தமிழிலே
நோய்களும் விலக்கிடும் இலக்கியம் தமிழிலே
நலன்களும் வெளிப்படும் இலக்கியம் தமிழிலே
(
உலகம்)
(
முதன்முதல்)
வள்ளுவன் வெண்பாவும் நறுக்காகத் தமிழிலே
ஔவையின் அகவலும் மிடுக்காகத் தமிழிலே
கம்பனின் அழகதும் செருகாகத் தமிழிலே
பாரதியின் வரிப்பாவும் விழிப்பாகத் தமிழிலே
(
உலகம்)
(
முதன்முதல்)


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!