Translate Tamil to any languages.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…



சும்மா! நகைச்சுவை என்று கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படத்தைக் கண்டேன்.

படத்தில் அன்றும் இன்றும் ஒருவர் சொல்வதாய் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை தமிழுக்கு மாற்றித் தரலாமெனக் கூகிள் மொழிபெயர்ப்பானை (Google Translate) நாடினேன்.


முதலில் அன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (When I was a kid so many girls wanted to kiss me, I allowed) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.

இடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க
நான் பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார் சிறுமியாக இருந்த போது, நான் அனுமதிஎன்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.
நான் சிறுவனாக இருந்த போது பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார், நான் அனுமதித்தேன்.
இவ்வாறே, இன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (But now I want to kiss so many girls, but they don’t allow. Selfish girls…) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.

இடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க
ஆனால் நான் இப்போது அப்படி பல பெண்கள் முத்தம் வேண்டும், ஆனால் அவர்கள் அனுமதிக்க கூடாது.
சுயநலம் பெண்கள்என்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.
ஆனால் இப்போது நான் அப்படிப் பல பெண்களை முத்தமிட விரும்புகிறேன், ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை.
சுயநலமான பெண்கள்
அவரவர் கொஞ்சும் அகவையில் எப்படியோ
எவரெவர் கெஞ்சும் அகவையில் இப்படியோ
கூகிள் தவறாக மொழி பெயர்க்கலாம்
நான் சரியாக மொழி பெயர்த்தேனா?
தீர்ப்பு உங்கள் கையில்…”


6 கருத்துகள் :

  1. valipokken சொல்கிறார்: 12:26 பிப இல் ஜூலை 7, 2015

    கூகுள் தமிழ் பெயர்ப்பை கொலவெறி தமிழ் என்பார்கள்... அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 12:05 பிப இல் ஜூலை 10, 2015

      கூகுள் மொழி பெயர்ப்பு நிறைவு தருவதில்லைத்தான்
      அதற்காக – அதனை விலக்கி வைக்க முடியாதே!
      எமது மொழி நடைக்கேற்ப வெளிப்படும் உணர்வு குன்றாமல் - நாம்
      மீளச் சரி செய்வோமாயின் கூகுள் மொழி பெயர்ப்பைப் பாவிக்கலாமே!

      நீக்கு
  2. Bagawanjee KA சொல்கிறார்: 1:43 பிப இல் ஜூலை 7, 2015

    #ஆனால் இப்போது நான் அப்படிப் பல பெண்களை முத்தமிட விரும்புகிறேன், ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை.
    சுயநலமான பெண்கள்#
    உள்ளத்துக் குமுறலை எப்படி தவறாய் மொழி பெயர்க்க முடியும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 11:58 முப இல் ஜூலை 10, 2015
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. தமிழை எந்த இயந்திர மொழி பெயர்ப்பியும் புரிந்துகொள்ள முடியாது. தமிழின் தனித்துவம் அதுதான். நீங்கள் சரியாகதான் மொழி பெயர்த்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!