ஒரு காலத்தில் எத்தனையோ ஆள்கள்
கணினி படிக்கப் பின்நின்றனர். கேட்டால்; ஆங்கிலம் தெரியாது
என்று சாட்டுக் கூறினர். ஆனால், இன்றோ எல்லோரும் கணினிக்
கல்வியிலே நாட்டம் கொள்கின்றனர். காரணம் கணினி நுட்பங்களில் தமிழ் இழையோடிவிட்டது.
இந்நிலை எதிர்காலத்தில் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப் பேண உதவலாம்.
நானும் ஒரு கணினி விரிவுரையாளர்
தான். ஒரு நாள் அகவை அறுபத்தேழில் ஓர் அப்பு என் வீட்டிற்கு வந்தார். அறிவுக்கதிர்
மாதாந்த இதழ் (அச்சு வழியிலும் இணைய வழியிலும்) நாடாத்தத் தேவையான பாடங்களைச்
சொல்லித் தருமாறு கேட்டுப்படித்தார். இதை ஏன் சொல்ல வந்தேன்? கணினி நுட்பமும் முதுமையும் தமிழைப் பேண முன்வருமாயின்; இன்றைய நம் இளசுகளுக்கு ஏன் மொழிப்பற்று எள்ளளவேனும் எட்டிப்பார்க்கவில்லை
என்பதைச் சுட்டிக் காட்ட வந்தேன்.
ஆளுக்கொரு வலைப்பூ, குமுகாய(சமூக) வலைத்தளம், இணையத் தளம், தமிழ் மென்பொருள் வெளியீடு என எத்தனையோ இளசுகள் கணினி, இணைய வழியில் இறங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவற்றினூடாகத் தூய தமிழைப் பேண முன்வராத துயரையே இங்கு கூறிக்கொள்ள
விரும்புகிறேன்.
கணினி, இணையம் மட்டுமன்றி இன்று நடைபேசியிலும் கூடத் தமிழ் உலாவுகிறதே! மாறும்
தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதோடு அத்தொழில் நுட்பங்களூடாகத் தமிழைப் பேண
முயன்றால் தமிழ் இனி மெல்லச் சாக இடமில்லையே!
rasmy சொல்கிறார்: 9:05 முப இல் பிப்ரவரி 24, 2013
பதிலளிநீக்குதூய தமிழில் எழுதுவதற்கு அநேகமானவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் வாசிப்பவர்கள் விளங்கிக் கொள்வார்களா என்பது பிரச்சனையாக இருக்கிறதே.
9:44 பிப இல் பிப்ரவரி 25, 2013
நீக்குஐயா!
தங்கள் கருத்துச் சரியானது. நாம் தூய தமிழைக் கையாளும் போது புழக்கத்தில் இருந்த சொல்களை அடைப்புக்குள் இடலாம். மேலதிக விளக்கத்தைப் பெற “உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி” என்ற பதிவைப் பார்க்கவும்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.