Translate Tamil to any languages.

சனி, 1 ஆகஸ்ட், 2015

புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!


அன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது;

ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார் அறிவைப் பகிரப் பேணிய ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற ஒரே தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் காரணமாக எனது எல்லா வலைப் பூக்களிலும் புதிய பதிவுகளை இடமுடியாதுள்ளது. வெகு விரைவில் புதிய தனி வலைப்பூவில் புதிய பதிவுகளுடன் சந்திக்கவுள்ளேன்.

என்னடா மோனே! அடி பிள்ளோய்!
உவன் சின்னப் பொடிப்பயல் யாழ்பாவாணன்
ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைக்கிறானாம்
ஈற்றில எல்லாவற்றையும் அழிச்சுப்போட்டு
கண்ணீர் வடிப்பான் போல கிடக்கே!
என்றாலும்
எங்கட தம்பி திண்டுக்கல் தனபாலனிட்டைச் சொல்லியாவது
யாழ்பாவாணனுக்கு அறிவுரை கூறித் திருத்துங்கோவேன்!
மதிப்புமிக்க பெரிய வலைப் படைப்பாளிகள் இப்படிக் கூறியோ தாமாகவோ முன்வந்து இதற்கான வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

எனக்குப் பேண இலகு என எண்ணியே நான் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற பெயரில் தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் பேண முயன்றாலும் வாசகருக்கும் பயன்தரும் ஒன்றாகவே நான் நம்புகிறேன். எனவே, எனது இம்முயற்சிக்குத் தங்களது வலைப்பூத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து வழங்கக்கூடிய வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் வழங்கி உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

30 கருத்துகள் :

 1. வாழ்த்துக்கள்! இதுதான் நல்லது. வாசகர்கள் வட்டமும் ஒருங்கே இணைவதால் ரேங்க் பட்டியலுக்கும் நல்லது.

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு முடிவு... தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...

  9944345233
  dindiguldhanabalan@yahoo.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது முயற்சிகள் பற்றித் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
   மிக்க நன்றி.

   நீக்கு
 3. நல்லதொரு முடிவு... தயங்காமல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தயங்காமல் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
   மிக்க நன்றி.

   நீக்கு
 4. தொடரட்டும் உங்கள் தூய நற்பணி!
  வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 5. ஆர்வம் காரணமாக இரண்டு மூன்று வலைபூகள் தொடங்கி விடுகிறோம். உண்மையில் தொடர்வது கடினமானது. வெவ்வேறு வகைகளாக இருந்தாலும் ஒரே வலைப்பூவில் எழுதுவது நல்லது. அல்லது இரண்டுக்கு மேல் வேண்டாம்.
  அனவைரையும் பாராட்டி நல்லவற்றை பகிர்ந்து கொள்ளும் உங்கள் பணி பாராட்டுக்குரியது
  ரூபனோடு தங்கள் இணைந்து நடத்திய கவிதைப் போட்டிக்கான் சான்றிதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி நன்றி

  பதிலளிநீக்கு
 6. புதிய முகவரி தேவை இல்லை. உங்கள் பிற வலைப்பூக்களில் உள்ள பதிவுகளை ஏதேனும் ஒரு வலைப்பூவில் இனைத்துக் கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
 7. ஆங்கிலமும் தமிழும் என்று தனியாக வைத்தேன். சங்கத் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்ந்து மூன்றாகத் திணறுகிறேன். ஒன்றாக இணைக்கலாமா என்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா. தேவைப்படும்பொழுது உங்கள் அனுபவத்தையும் கேட்டு அறிந்து கொள்வேன்.
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் தோழர்! பின்தொடர்கிறேன் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள். உங்கள் தீர்மானம் சரி. அதுவே உங்களுக்குச் சிறப்பு

  பதிலளிநீக்கு
 10. ஞா. கலையரசி 4 August 2015 at 20:23

  உங்கள் முடிவு மிகச்சரி. ஒன்றாக இருப்பது தான் நல்லது. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 11. தனிமரம் 14 August 2015 at 05:21

  வாழ்த்துக்கள்.ஐயா தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!