தமிழரின் முதலீடு கல்வி தான்.
இவ்வுலகில் முதலில் தோன்றிய தமிழை, உலகெங்கும் உலாவிய தமிழை உலகெங்கிலும் வலை வழியே கணினிச் செயலிகள் வழியே உலாவச் செய்ய முடியும் என்பதை எல்லோரும் அறிவீர்கள்.
அடொப், மைக்ரோசொப்ட் போன்ற உலகின் முன்னணிக் கணினிச் செயலிகள் உருவாக்கும் நிறுவனங்களில் பணி செய்கின்றனர். அவர்களாலும் தமிழைப் பேண உதவும் செயலிகளை ஆக்கித் தரமுடியும். ஆயினும், இவ்வாறான நிறுவனங்களில் பணி செய்யாத தமிழறிஞர்களே அதிகம் தமிழைப் பேண உதவும் செயலிகளை ஆக்கித் தந்துள்ளனர்.
கணினிச் செயலி, வலைச் செயலி ஆக்கும் ஆற்றல் எனக்கு இருந்தாலும் இனிவரும் காலங்களில் தான் எனது வெளியீடுகளைத் தரக் காத்திருக்கின்றேன். "யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும்." என்பதற்கிணங்கச் சிறப்பாகத் தமிழைப் பேண உதவும் செயலிகளை நம்மாளுகள் பயன்படுத்த வசதியாக அடுத்த அறிஞர்களின் செயலிகளை அறிமுகம் செய்வதும் எனது பணியாக இருக்கும்.
அந்த வகையில் Just Try This (stop searching start doing!) என்ற தளம் அறிமுகம் செய்திருக்கும் திருக்குறளுக்கான செயலியை இன்று இங்கே பார்க்கலாம். வலை வழியே எழுமாறாக ஏதாவதொரு திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்தக்கூடிய செயலியை இத்தளத்தில் (http://justtrythis.blogspot.com/2012/06/display-random-thirukkural-on-your.html) வெளியிட்டுள்ளனர். அதனைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்வடைகின்றேன்.
மேற்காணும் அவர்களது தளத்திற்குச் சென்று கீழ்காணும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் தளத்திலும் ஒட்டலாம்.
தளத்தின் தலை (Header) அல்லது அடி (Footer) செயலிப் பட்டையில் ஒரு செயலியை (வழிகாட்டல்: http://www.wikihow.com/Add-a-Widget-to-Blogger) இணைத்துப் பின் படியெடுத்த நிகழ்நிரலை (Code) ஒட்டிச் சேமிக்கவும். இப்போது உங்கள் தளத்தில் எழுமாறாக ஏதாவதொரு திருக்குறளைப் பார்க்கலாம்.
இதோ நான் இப்பதிவில் திருக்குறளுக்கான செயலியை இணைத்திருக்கிறேன். பதிவில் செயலி அமைய வேண்டிய இடத்தில் துடிப்பியை (Cursor) நிறுத்தி இடது பக்க மேல் மூலையில் HTML என்பதை அழுத்திப் படியெடுத்த நிகழ்நிரலை (Code) ஒட்டிப் பின் Compose என்பதை அழுத்திப் பதிவை நிறைவு செய்யலாம்.
இவ்வாறான செயலிகள் வழியே தமிழைப் பேண, நாம் பலருக்கு இவற்றை அறிமுகம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!