கொரோனா
என்ற கொடிய தொற்று நோய் எங்கள் உறவுகளைப் பிரித்துவைத்து வேடிக்கை பார்ப்பதால்
சித்திரைப் புத்தாண்டு மகிழ்ச்சியைத் தராமல் கடந்து செல்கிறது. கொரோனா
எங்களை வீட்டில் முடக்கியதால், நாம் எமது வெளியீடுகளை இணையத்தில் வெளியிட வாய்ப்புத்
தந்திருக்கிறது எனலாம்.
எடுத்த
எடுப்பிலே எல்லோரும் வலைப்பதிவில் எழுதிவிடலாம்; தமிழ் விக்கிப்பீடியாவில்
எழுதுவதற்குக் கனக்கப் படிக்க வேண்டுமென எல்லோரும் எண்ணமிடலாம். அப்படியென்ன
கனக்கப் படிக்க வேண்டியிருக்கு? நானும் அப்படிக் கற்றுக் கொள்ளலாம் என தேடிக்கொண்ட தகவலை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விக்கிப்பீடியா
பற்றிய பக்கங்களைப் படித்த பின்னர் தமிழ் விக்கிபீடியா கலைக் களஞ்சியத்தில்
பதிவுகளை பதிவு செய்வதற்கு இலகுவாக இருக்கலாம். அவ்வாறான சில பக்கங்களை நான்
தேடிக் கற்றுக் கொண்டு, அவற்றைக் கீழே தருகின்றேன்.
விக்கிப்பீடியா:பதிப்புரிமை
விக்கிப்பீடியா:
தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
விக்கிப்பீடியா:
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கிப்பீடியா:
நடைக் கையேடு
விக்கிப்பீடியா:
முதல் கட்டுரை
மேற்படி
பக்கங்களைக் கற்று அறிந்து தொகுத்த எனது எண்ணங்களை ஒளியும் ஒலியும் (வீடியோ)
பதிவாகப் பகிர்ந்துள்ளேன். அதனை நீங்கள் பார்த்துப் புரிந்துகொள்வீர்கள் என
நம்புகிறேன்.
இணையத்தில்
அதிக தகவல் கொண்ட தளம் தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமே! அதில், எல்லோரும் இணைந்து அதிக
தகவலை இணைக்க உதவும் நுட்பங்களைப் பகிர்ந்துள்ளேன்.
தங்களது தகவல் களஞ்சியத்திற்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குசித்திரை திருநாள் வாழ்த்துகள்.
சித்திரை திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவிக்கிபீடியா பற்றிய தங்களின் விளக்கவுரை மூலம் பல விசயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.... தமிழ் விக்கிபீடியாவில் அதிக அளவில் தமிழ் கட்டுரைகளை பதிவேற்றியது இலங்கையை செர்ந்த ஒரு அன்பர் என்பதை அண்மையில் ஒரு செய்தியில் அறிந்து ஆச்சரியமும் பெருமையும் பட்டதுண்டு ... நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குபதிவினைப் படித்தேன். உங்களுடைய எண்ணங்களை முழுமையாகக் கேட்டேன். இன்னும் தொடர்ந்து பேசவுள்ளீர்கள் என நினைக்கிறேன். 1000ஆவது பதிவினை விக்கிப்பீடியாவில் நிறைவு செய்யவுள்ள நிலையில் என் அனுபவமாக நான் நினைப்பது நமக்கருகிலுள்ள முக்கிய நபர்கள், நாம் சென்ற இடங்கள், சென்ற சுற்றுலாக்கள், வாசித்த நூல்கள், ரசித்த தொல்லியல் களங்கள் என்றவாறு நமக்கு அண்மையானவற்றிலிருந்து ஆரம்பிப்பதே. தொடர்ந்து பிற பொருண்மைகளில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். பின்னர் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்த்தேன். முடிந்த வரை தரவுகள் கிடைப்பனவற்றை தலைப்பாகத் தெரிவு செய்தால் எளிதாக பதிவினை அமைக்கலாம். கும்பகோணத்தில் பிறந்த நிலையில் இயல்பாகவே கோயில்கள்மீதான ஈர்ப்பு எனக்கு அதிகம்.அதன் காரணமோ என்னவோ விக்கிகாமன்சில் 1000க்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பதிந்துள்ளேன். ஒரு கோயிலுக்குச் சென்றால் தரவுகளைத் திரட்டுவதோடு குறைந்தது 10 புகைப்படங்கள் எடுப்பேன். அவற்றில் 5 முதல் 7 வரை தெரிவு செய்து அந்தந்த கட்டுரைகளில் இணைப்பேன். விக்கிப்பீடியாவில் நான் எழுதத் தொடங்கிய காலத்திற்குப் பின் அனைத்தையும் விக்கிப்பீடியா கண்ணோடு நோக்க ஆரம்பித்ததால் எனக்கு இது எளிதானது என நினைக்கிறேன். ஆங்காங்கே சில சிரமங்கள் வந்தாலும் அதனை நன்கு எதிர்நோக்கும் அனுபவத்தை இவ்வாறாகவே பெற்றேன்.
பதிலளிநீக்குDr B Jambulingam ஐயாவுக்கு வாழ்த்துக்கள் .. 1000ஆவது பதிவினை விக்கிப்பீடியாவில் நிறைவு செய்யவுள்ள உங்களின் பணி மகத்தானது ... நீங்கள் செய்யும் பணியே உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
நீக்குதங்கள் தகவல்களுக்கு நன்றி
பதிலளிநீக்குசித்திரை புத்தாண்டுவாழ்த்துக்கள் ..தகவலுக்கும் நன்றிகள்
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குpost is very good, i like it, and thanks so much
பதிலளிநீக்குThis is a great idea to start a new blog.
Best digital Marketing company in noida
It's really unique and informative article. Great work. Much appreciated.
பதிலளிநீக்குKeep posting many more.
Best digital Marketing company in noida