Translate Tamil to any languages.

செவ்வாய், 23 ஜூன், 2020

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – ஒன்று


வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 19/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. சிங்கப்பூர், இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.



இணைய வழி நேர்காணல்

வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம் https://meet.jit.si/yarlpavanan ஊடாக நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)  பகிரும் அடுத்த பணியையும் தொடங்கியுள்ளேன். விரைவில் முதலாம் நேர்காணலை வலையொளியில் (Youtube)  காணலாம்.

6 கருத்துகள் :

  1. தங்களது சேவை தமிழுலகுக்கு தேவை வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  2. அருமை, கொஞ்சம் கேட்டேன், அது 1.24 மணி நேரம் என்பதால் பொறுமையாகக் கேட்க வேண்டும்.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அரிய பல பணிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. மிகச் சிறப்பான உரைகள் விவாதங்கள்

    பதிலளிநீக்கு
  5. காணொலியைக் கேட்டேன் /கண்டேன். பங்குபெற்றவர்கள் அனைவரும் முனைப்போடு செயல்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட தலைப்புக்கேற்ப நேர ஒழுங்கைக் கடைப்பிடிக்க சற்றே முயற்சி தேவைப்படும் என்று தோன்றுகிறது. இனிவரும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நிச்சயம் அற்புதமான உரைகளைக் கேட்கமுடியும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!