Translate Tamil to any languages.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

நல்ல நண்பர்கள் தேவை!


2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி ஆசிரியப்பா - மரபுக்கவிதைப் போட்டி அறிவிப்புச் செய்தேன். ஒருவரும் பங்கெடுக்காமை துயரம் தருகிறது. மின்னஞ்சலில் அனுப்பாது கருத்துக்களத்தில் பதிவு செய்யுமாறு கேட்டது தவறோ தெரியவில்லை. நான் தொடர்ந்தும் வலைப்பக்கம் வருவேன். முகநூலில் மூழ்கியோரை வலைப்பக்கம் இழுத்துவர முயற்சிப்பேன்.
இலங்கையில் Facebook, Instagram, Youtube, whatsup, viber தடை. அப்ப வலைப்பக்கம் வாங்க என்றழைக்கிறது இனிய வலைப்பூக்கள்.


நல்ல நண்பர்கள் தேவை!

நண்பர்கள் எம்மை நாடி வரலாம்.
நண்பர்களைத் தேடி நாம் போகலாம்.
"ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூட
ஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!" என
பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்!
நண்பர்களை அணைக்கத் தான்
நானும் விரும்புகின்றேன்.
நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும்
நானும் ஒதுங்குகின்றேன்.
எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்
எச்சரிக்கையாகப் பழகுகின்றேன்.
நண்பர்களே வேண்டாமென
நானும் ஒதுங்கவில்லை - இத்தால்
நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன்.
நண்பர்களால் வானுயரப் புகழீட்டிய
நண்பர்களால் தான் உணர்ந்தேன்
நண்பர்கள் எனக்குத் தேவை என்றே!
நண்பர்கள் இல்லையென்றால் - தனக்கு
உளநோய் தான் வந்திருக்குமென
நண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன்
நண்பர்கள் கூட நல்மருந்தென்றே!
என்னை நண்பர் ஆக்குங்கள்...
என்னை எதிரி ஆக்காதீர்கள்...
நான் எதிரியாவதை விட
நல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்!
நல்ல நண்பர்களால்
நானும் நீடூழி வாழலாமென்ற
தன்நலம் கருதியே அழைத்தேன்
நாளையாவது நல்ல நண்பர்களாக
நாமிருக்கலாமென்றே!

5 கருத்துகள் :

  1. நானும் நல்ல நண்பர்தான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. உங்களது முயற்சி சிறக்க வாழ்த்துகள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  3. வருத்தம் வேண்டாம் அய்யா, அறிவிப்புக்களை ஒரு குழு உருவாக்கி அவர்களின் பதிவுகளில் வாட்சப் எண்களில் பகிரக் கோருங்கள்.
    கலக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. நல்ல நண்பர்கள் கிடைக்க எனது முதல் வாழ்த்துகள் நண்பரே!!!

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!