Translate Tamil to any languages.

திங்கள், 30 மே, 2016

சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!

எனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அதனைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். அக்குரல் செய்திக்குப் பின்னணி இசை சேர்த்துப் பதிவு செய்துள்ளேன். அதனைக் கேட்டுணரக் கீழுள்ள படத்தில் சிவப்பு, வெள்ளை நிற செய் (Play) அழுத்தியை (Button) அழுத்தவும்.

 

இந்தக் குரல் வழிச் செய்தி ஊடாக வேதியியல் (Chemistry) கற்ற பொறியியலாளர் ரமேஸ் அவர்கள் பஞ்சு மிட்டாய், சுவைகளி (Chocolate), குளிர்களி (Ice Cream), மற்றும் சுவையூட்டி கலந்த உணவுகளால் நமது உடலுக்குத் தீங்கு வரும்; அதனைச் சாப்பிட வேண்டாம் என வழிகாட்டுகின்றார். அவரது வேண்டுதலை ஏற்று "சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!" என இப்பதிவை வலைப்பூ உறவுகளுடன் பகிருகின்றேன்.

நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவுகளில் சுவையூட்டி சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும் முன் சற்று நமது சாவையும் எண்ணிப் பாருங்கள். இயற்கையான சுவையூட்டிகள் விலை அதிகமானது. ஆகையால், விலை குறைந்த சாவைத் தரவல்ல செயற்கையான சுவையூட்டிகள் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. அதன் பின்விளைவு சாவு வரை எம்மைத் தள்ளி விடலாம். 

எப்படி என்று என்னைக் கேட்க வேண்டாம்; மேலுள்ள குரல் வழிச் செய்தியில் பொறியியலாளர் ரமேஸ் அவர்கள் விரிவான விளக்கம் தந்துள்ளார். அதாவது, செயற்கையான சுவையூட்டிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன; அவற்றில் கலக்கப்படும் நஞ்சுகள் எவை என்பதை சிறப்பாக அலசி உள்ளார். அவரது குரல் வழிச் செய்தியைக் கேட்ட பின், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வரலாம். அம்மாற்றம் என்னவென உங்களுக்குத் தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்து உதவுங்கள்.

உணவுகளில் சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால், அதனை உண்டு ஆயுளைக் குறைக்க வேண்டாம் என முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன். மீளவும் இப்பதிவினூடாக சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாமென அறியத் தருகின்றேன். சமச்சீர் உணவுகள், இயற்கை உணவுகள், அவித்த உணவுகள் (பொரியல், வறுவல் சேர்க்காத), பனம் பண்டங்கள் ஆகியவற்றோடு உப்பு, புளி, காரம் (மிளகாய்த் தூள்), எண்ணெய் போன்றன சமையலில் குறைத்துச் சேர்க்கவும். அப்ப தான் எம்மை நெருங்கி வரும் சாவைக் கொஞ்சம் விரட்டி விடலாம்.

மேற்குறிப்பிட்டவாறு உணவை உண்டாலும் நேரம் தப்பாமல் மூன்று வேளையும் உண்ண வேண்டும். ஒரு வேளை உணவை உண்ட பின், நான்கு மணி நேரம் (உணவு சமிபாடு அடைய) கழித்து அடுத்த வேளை உணவை உண்ணலாம். நாளொன்றுக்குக் குறைந்தது ஆறு லீற்றர் சுத்தமான நீரைக் குடிக்கலாம். அதேவேளை உடலில் இருந்து வியர்வை வெளியேறத் தக்கதாக நாளொன்றுக்கு அரை மணி நேரம் கடின வேலை அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வொழுங்கைப் பின்பற்றினால் நெடுநாள் நோயின்றி வாழலாமே!


14 கருத்துகள் :

  1. நோயின்றி வாழ உதவும் வகையில் அருமையான யோசனைகளைத் தரும் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இணைப்பிற்கு நன்றிகள் யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பகிர்வு நண்பரே நன்றி

    பதிலளிநீக்கு
  4. மிக மிகப் பயனுள்ள பதிவு, இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவும் கூட. ரமேஸ் அவர்களின் பேச்சையும் கேட்டோம். அறிந்துகொண்டோம். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல்கள் சகோ நன்றி

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!