அந்தக்
காலத்தில ஒருவள் "பெண் குழந்தையைப் பெற்றுவிட்டாள்" என்றால் அந்த
வீட்டில போர்க்களம் தான். மாமிமார்கள் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போடவா,
மருமகளானாய்" என்று மருமகளிடம் புலிப் பாய்ச்சல் பாய்வார்களாம். மகன்மார்
"பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போட வந்தவள், வேண்டாம்" என்று இரண்டாவது
திருமணம் செய்ய அம்மாக்களிடம் கெஞ்சுவார்களாம். இந்தக் காலத்தில இந்தப் போருக்கு
என்ன தீர்வு?
பெண்
பிள்ளை பிறந்தால்
பெத்தவளில்
தவறில்லை...
பிறக்கப்
போவது
ஆணா?
பெண்ணா? - அதை
உறுதிப்படுத்துவதே
ஆணின்
உயிரணுக்களே! - அப்படியிருக்க
பெண்
மீது பழி சுமத்தும் ஆண்களுக்கு
சாவு
ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கலாம்!
பெண்ணாய்
இருந்தும்
மருமகளிடம்
தான் பிழை என்னும்
மாமிமார்களுக்கு
- இரு மடங்கு
சாவு
ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கலாம்!
இந்தக்
காலத்தில இந்தப் போருக்கு இது தான் தீர்வு என்றால் எந்தக் கடவுளும் ஏற்க
மாட்டார்கள். அதற்கு நாளைய அறிவியலை வைத்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். அப்ப
தான் உண்மையை உணர்ந்த உள்ளங்களில் மாற்றம் காணலாமென நம்பலாம்.
மனிதர்கள்
எல்லோருக்கும் 46 குரோமோசோம்கள் (Chromosomes) உள்ளன. இதில் ஆணின்
உயிரணுக்களிலிருக்கும் 23 குரோமோசோம்களும் பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் 23
குரோமோசோம்களும் தான் குடும்ப உறவின் பயனாகக் கருவுறும் வேளை குழந்தை உருவாகக்
காரணமாகின்றன. அதாவது, மொத்தம் 23 இணை (ஜோடி) குரோமோசோம்கள் இருக்கிறது. இந்த 23
இணை (ஜோடி) குரோமோசோம்களில் 22 பரம்பரையாக
வரக்கூடியது. 23 ஆவது இணை (ஜோடி) குரோமோசோம்கள் ‘ஆணா? பெண்ணா?’ என பாலியலைத் (Sex)
தீர்மானிக்கும் குரோமோசோம்கள் ஆகும்.
23
ஆவது இணை (ஜோடி) குரோமோசோம்கள் ‘ஆணா? பெண்ணா?’ என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறதா?
அதாவது ஆணின் குரோமோசோமில் 22X உம் 1Y உம்
இருக்க, பெண்ணின் குரோமோசோமில் 23X உம் இருக்கிறதாம். அப்படியிருக்கையில்
குடும்ப உறவின் பயனாகக் கருவுறும் வேளை பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் X
குரோமோசோம் இணைந்தால் பெண் குழந்தையாகவும் பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் Y
குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தையாகவும் கருவுறுகிறதாம். இதன் பயனாக பெண்
குழந்தையோ ஆண் குழந்தையோ கிடைப்பதற்கு ஆணே முழுப் பொறுப்பையும் ஏற்கிறார். ஆயினும்
பெண் பிள்ளை கருவுற உடனிருந்த ஆண் தானே குற்றவாளி! பாழாய்ப் போன மக்களாயம்
(சமூகம்) பெண்ணில் பழிபோடுவதைத் தான் தொடருகிறது.
இதற்குத்
திருமூலரின் பாடலொன்றும் சான்றாக மின்னுகிறதே!
462.
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
(ப.
இ.) காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து
சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். பெண்ணாகிய இடப்பால் மூச்சு
மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும்
வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாக இருக்கும். ஆள்வினை முயற்சியில்
கருத்து மிகுதியாகவிருந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச் சிறப்புடன்
பிறந்த உயிர் 'உழையார் புவனம் ஒருமூன்று' மொருங்குடன் ஆளும். அகப் பயிற்சியால்
விந்து கட்டுப்பட்டுத் திண்மை ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச்
செல்லுவதில்லை. ஆதலால் பாய்ந்ததும் இல்லை என்றனர். பாணவம்; பண்ணவம் என்பதன்
செய்யுள் திரிபு. பண்ணவம் - திண்மை. (27)
சான்று: http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=463&book_id=118&head_id=67&sub_id=2414
இதன்படிக்குக்
குடும்ப உறவின் போது (பக்கம் பார்த்துச் சரிந்து கூடும் தன்மையப் பொறுத்து) வலப்
பக்க மூச்சு அதிகமெனின் ஆண் குழந்தையும் இடப் பக்க மூச்சு அதிகமெனின் பெண்
குழந்தையும் இரண்டு மூச்சும் சமனாயின் திருநங்கை (அலி) குழந்தையும் பிறக்குமாம்.
அப்படியாயின் இருபாலாரும் பொறுப்பு எனலாம். ஆயினும் இங்கும் ஆணின் மூச்சுத் தான்
குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கிறது. மொத்தத்தில் சொல்லப் போனால்,
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது முழுக்க முழுக்க ஆண்
மட்டும் தான். பெண்ணுக்கு இதில் எந்தப் பங்கும் கிடையாது.
எத்தனையோ
இணையர்கள் குழந்தைகள் இல்லாமல் கண்ணீர் வடிக்கின்றனர். எத்தனையோ இணையர்கள் ஆணென்ன
பெண்ணென்ன எந்தக் குழந்தை பிறந்தாலும் போதும் என்கின்றனர். குழந்தையின் அருமை
உணர்ந்து செயற்படாதோர் இதனைக் கருத்தில் கொள்ளவும். பிறக்கும் குழந்தை ஆணாக
இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நீங்கள் கூடிப் பெற்றது தானே! அந்தக்
குழந்தையைப் பாதுகாப்பது உங்கள் கடமை.
இணையர்கள்
கூடியாச்சு; பெண்ணின் வயிற்றில் குழந்தை கருவுற்றது. வயிற்றில் வளருவது பெண்
குழந்தை எனின், குழந்தைப் பெறுமதி உணராமல் கருக்கலைப்புச் செய்வது உயிர்க்
கொலைக்குச் சமமானது. குறித்த குழந்தையைப் பெற்று, குழந்தைகள் இல்லாமல் கண்ணீர்
வடிக்கின்ற பெற்றோரிடம் கொடுத்து வாழ்வளிக்க முன்வாருங்கள்.
"பெட்டைப்
பிள்ளையைப் பெத்துப் போடவா, மருமகளானாய்" என்று மருமகளிடம் பாயும்
மாமிமார்களும் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போட வந்தவள், வேண்டாம்"
என்று அம்மாக்களிடம் இரண்டாவது திருமணம் செய்யக் கெஞ்சும் மகன்மாரும் இதனைப்
படித்த பின் தங்கள் முடிவை மாற்றினால் போதும். இந்தக் காலத்தில "பிறக்கப்
போவது ஆணா? பெண்ணா?" என்ற போருக்கு இதுவே தீர்வு!
திருமூலர் பாடலுடன் அருமையான விளக்கக் கட்டுரை! நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
விளக்கம் நன்று பெண் பிள்ளையை பெறுவதை பெண்களே தவறாக சொல்வதுதான் வேதனைக்குறியது நண்பரே
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
அருமை.பெண்ணே பிறக்கவில்லை என்றால் அடுத்த தலைமுறை ஏது.இதை உணராத மூடர்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
இப்போது உலகில் ஆணை விட பெண்களின் சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கிறதாம்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
அருமையான பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே...
பதிலளிநீக்குதிருமந்திரத்தில் இல்லாத செய்திகளே இல்லை என்னுமளவு பெருமையுடையது. அதனை இணைத்து பதிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
திருமந்திரத்தின் அருமையே அருமை
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி