Translate Tamil to any languages.

சனி, 4 மார்ச், 2017

நாற்காலியைக் கேளுங்கள்

நான் கூகிளில் தேடிப் பொறுக்கிய படங்களில் இருந்து உருவாக்கிய நாற்காலி படம் தான் இங்கே காண்கிறீர்கள். இப்பதிவு "நாற்காலி பேசினால்...? http://dindiguldhanabalan.blogspot.com/2017/03/CHAIR-to-SHARE.html " என்ற அறிஞர் திண்டுக்கல் தனபாலனின் பதிவைப் படித்ததும் எழுதியது. அவரது பதிவைப் படித்த பின் இதனைப் படித்தால் நன்று.
வீட்டுக்கு வீடு வரவேற்பு இடத்தில
நாற்காலிகள் தான் வரவேற்கும் - ஆனால்
வருவோர் எல்லோரும் இருக்க
வீட்டுக்கு வீடு ஆள்கள் இடமளியார்...
வந்தோரில் சிலர் வாசல் வரை வந்து
பேசிவிட்டுத் திரும்புவதைக் கூட
நாற்காலிகள் கூடக் கண்டிருக்கும்...
வந்தோரில் சிலர் நாற்காலிகளில் குந்தியே
நாற்காலிகளும் நொந்து அழுதிருக்கும்...
எல்லாமே
வீட்டுக்கு வீடு ஆள்களைப் பற்றியதே!

நாட்டுக்கு நாடு நடை போட்டால்
அங்கும் வாக்கு வேண்ட வருவார்களாம்
கேட்டு வேண்டியே செல்வார்களாம் - அவர்கள்
தேர்தலில் வென்ற பின்னர் - ஒரு போதும்
வாக்களித்த மக்களை எட்டியும் பார்க்காராம்...
ஏனென்று
கேள்வி அம்பு ஒன்றை எய்துவிட்டால்
நாடாளும் மன்றில் நாளும் தோறும்
தங்கள் நாற்காலியைச் சுத்தம் செய்வார்களாம்...
எல்லாம்
நாட்டுக்கு நாடு அரசியலாளர் பற்றியதே!

ஆங்காங்கே அரங்கிலே பேசுவோரைப் பாரும்
பேச வந்த பேச்சாளர்களில் சிலர்
நீளம், அகலம், ஆழம் பார்த்து
நாற்காலியில் இருக்காமலே பேசுவார்...
பேச வந்த பேச்சாளர்களில் சிலர்
எனக்கு முன் பேசிய அறிஞரோ
அழகாகப் பேசி அறிவை ஊட்டினாரே
அவரை விட நானெதைப் பேசுவேனென
நாற்காலியில் இருப்பதற்கே சுருங்கப் பேசுவார்...
எல்லாம்
அரங்கிற்கு அரங்கு அறிஞர்கள் பற்றியதே!

நாற்காலிக்கு நாற்காலி அமருவோர் வேறு
நாற்காலியில் அமர்ந்தோரின் ஆளுமையும் வேறு
நாற்காலிகளில் இருந்தவர்களைப் பற்றியறிய
நாலா பக்கமும் எவரும் இல்லையே...
அப்படி என்றால் நாற்காலிகள் பேசினால்
நம்மாளுங்க உண்மையை உலகறியுமென அஞ்சி
நம்மாளுங்க என்னென்னமோ எண்ணியிருப்பாங்க...
எப்படியோ எதற்கும் நாற்காலியைத் தானே
நாங்களும் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!