"தமிழன் என்று
சொல்லடா!
தலை நிமிர்ந்து
நில்லடா!
தமிழன் என்று சொல்ல
மட்டற்ற மகிழ்ச்சி
அடைகிறேன்." எனக் கூகிள் பிளஸ் இல்
அறிஞர் சிவபிரியா
பகிர்ந்த பதிவைப் படித்ததும்
நானும் குறித்த
செய்தியைத் தங்களுடன் பகிர விரும்பினேன். அதன் விளைவு இப்பதிவு!
தம் + இழ் =
"தமிழ்" என்றால்
எம்மில் இருந்து எழும்
மொழியே!
தமிழ் எழுத்தொலிகள்
நம்மாளுங்க
உணர்ச்சிகளால் எழும்
ஒலிகளே!
ஓர் எழுத்துச்
சொல்லாவதும்
பிறமொழிகளில் இல்லாத
'ழ' எழுத்து
இருப்பதும்
தமிழ் மொழியின்
சிறப்பே!
உணர்ச்சிகள் முட்ட
முட்ட
ஓர் எழுத்துச் சொல்
ஈர் எழுத்துச்
சொல்லாவதும்
ஈற்றில் பல எழுத்துச்
சொல்லாகியும்
தமிழ் மொழி வளம்
உண்டெனின்
தமிழே உலகின் முதன்
மொழி!
அதற்குச் சான்றாகக்
கீழ்வரும் இணைப்புகளைப் பகிருகிறேன்.
Top 10 Oldest
Languages in the World
முதலாம் இடத்தில்
தமிழ் மொழி (Tamil). அதாவது 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாம்.
இரண்டாம் இடத்தில்
சமஸ்கிருத மொழி (Sanskrit). அதாவது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி சமஸ்கிருத
மொழியாம்.
மூன்றாம் இடத்தில்
எகிப்து மொழி (Egyptian). அதாவது கி.மு. 2600 இற்கும் கி.மு. 2000 இற்கும்
இடையேயான ஆண்டு காலப் பகுதியில் தான் தலையைக் காட்டி இருக்காம்.
நான்காம் இடத்தில்
கிரீக் (Greek). அதாவது கி.மு. 1450 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி இருக்காம்.
ஐந்தாம் இடத்தில் சீன
மொழி (Chinese). அதாவது 3000 ஆண்டு காலப் பழமையோடு
கி.மு. 1200 இல் தான்
தலையைக் காட்டி இருக்காம்.
ஆறாம் இடத்தில் அராமிக்
மொழி (Aramaic). அதாவது பத்தாம் நூற்றாண்டு - கி.மு. 1000 இல் தான் தலையைக் காட்டி
இருக்காம்.
ஏழாவது இடத்தில்
எபிரேய மொழி (Hebrew). அதாவது 3000 ஆண்டு காலப் பழமையோடு
கி.மு. 1000 இல் தான்
தலையைக் காட்டி இருக்காம்.
எட்டாவது இடத்தில்
கொரியன் மொழி (Korian). அதாவது கி.மு. 600 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி
இருக்காம்.
ஒன்பதாவது இடத்தில்
ஆர்மேனியன் மொழி (Armenian). அதாவது கி.மு. 450 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி
இருக்காம்.
பத்தாவது இடத்தில்
லத்தீன் மொழி (Lattin). அதாவது கி.மு. 75 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி
இருக்காம்.
மேலுள்ள படங்கள்
வலைவழியே தேடிப் பொறுக்கியது. உலகெங்கும் வாழும் தமிழர், தங்கள் தாய் மொழியின்
சிறப்பை உலக மொழிகளில் பரப்பி தமிழின் தொன்மையை அடையாளப்படுத்த முன்வரவேண்டும்.
பிறமொழிக் கலப்பின்றித் தமிழைப் பேணுவதன் மூலமே, தமிழை வாழ வைக்க இயலுமென்பதை
ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!