யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த
வெள்ளைக்காரர் ஒருவர்
ஈழவரைப் பார்த்து
ஏறாவூர் எங்கிருக்கு என்றார்...
இராவணன் ஆண்ட
தமிழரின் நாடான இலங்கையே
ஈரேழு தீவுகளைக் கொண்டதால்
ஈழம் என்கிறார்கள்...
எங்கிருந்தோ வந்த சிங்களவர்
தமிழரை விரட்டி வெளியேற்றியதால்
உலகெங்கும் ஈழத் தமிழராச்சு....
இடம் பெயர்ந்த தமிழர்
மீளக் குடியமராத இடங்கள்
எல்லாமே - அவர்கள்
ஏறியிறங்கா ஏறாவூர்கள் தானே...
எப்படியிருப்பினும்
மட்டக்களப்பை அண்டி - ஆங்கே
ஓர் ஏறாவூர் இருக்குத்
தான்...
தங்கள் சொந்த இடங்களுக்கு
தமிழர் மீளத் திரும்பினால்
- அவர்களின்
ஏறாவூர்களை ஏறியிறங்கப் பார்க்கலாமென
ஈழவரும் பதிலிறுக்க
கள்ளமில்லா அந்த வெள்ளைக்காரும்
எப்பதான் ஏறாவூருக்கு ஏறலாமென
ஈழவரை நெருக்கினார்!
இப்பவும் முடியும் எப்பவும் முடியும்
ஜ.நா. அவை
(சபை) தலையிட்டு
ஈழத் தமிழர்
சிக்கலைத் தீர்த்து வைத்தாலென
ஈழவரும் சொல்லி முடிக்க
போன வெள்ளைக்காரர் போனது
தான்...
இப்படித் தான்
ஜ.நா. அவை
(சபை) ஆள்கள் கூட
வந்தனர்... பார்த்தனர்... கேட்டுமறிந்தனர்...
ஆயினும்
எங்கிருந்தோ வந்த சிங்களவர்
விரட்டி வெளியேற்றத் தமிழரின்
வாழ்விடங்களும் பறி போகிறதே...
இலங்கையர் உள்நாட்டுப் பேச்சுக்களில்
நம்பிக்கை இழந்து
வெளிநாட்டவர் பேச்சை நம்பினால்
இன்றுவரை
எந்த வெள்ளைக்காரரும்
ஜ.நா. அவை
(சபை) ஊடாக
ஈழத் தமிழர்
சிக்கலைத் தீர்த்து வைத்து
வாழ்வளிக்க முன்வரவில்லையே!
ஜ.நா. அவையே
(சபையே)
ஈழத் தமிழர் கடலில்
வீழ்ந்து
சாகும் வரையா காத்திருக்கின்றாய்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!