என்னையும்
கவிதை எழுத வைக்க
பலர் தூண்டி இருந்தனர்!
ஒழுங்காகக் கையெழுத்துப் போடத் தெரியாது
எனக்கு எப்படி எழுத முடியும் என்றேன்!
பத்திரிகையை வாசித்துப் பார்
மூ.மேத்தாவின் புத்தகத்தை வாசித்துப் பார்
யாருடைய கிறுக்கலையாவது வாசித்துப் பார்
அதேபோல - நீயும்
எழுத முயற்சி எடுத்துப் பார் என்று ஆளுக்காள் அறிவுரை சொன்னார்கள்!
"உனக்கு நீயே கடவுள்
உனக்கு நீயே பிரம்மா
உனக்கு நீயே நீதிபதி
உனக்கு நீயே முதலாளி
உனக்கு நீயே தொழிலாளி
உனக்கு நீயே எல்லாமும் தான்
அப்படி இருக்கையில்
எப்படியாவது எல்லாவற்றுக்கும்
உன் முடிவே செல்லுபடி ஆகும்!"
என்றெழுதிச் சிலரிடம் காட்டினேன்!
"நாலு பேரை விசாரித்து
மூன்று பேர் சொன்னதையாவது
முடிவாகக் கொள்ளலாமே!
மாற்றார் முடிவுகள் எப்படி இருக்குமென
பொருட்படுத்தாமல் முடிவு எடுப்பது
முற்றிலும் தவறல்லவா!" என்று
வாசித்தவர் பலர் - ஆளுக்கொரு
எதிர்க்கருத்தை முன்வைத்தனர்!
"எவரும் எதையும் எப்படியும்
எழுதிவிடலாம் - ஆனால்
வாசிப்பவர் விருப்பந்து எழுதினால் மட்டுமே
எழுத்துக்குப் பெறுமதி கிட்டும்!" என்று
தோழி ஒருத்தி
எனக்கு ஊக்கம் தந்தாள்!
"உள்ளம் நிறையக் கிடக்கின்ற
எதனையும் வெளியில் கொட்டி விட்டாள்
உள்ளத்தில் அமைதி கிட்டும் - அதற்கு
எழுத்து நல்ல ஊடகம் ஆகும்!" என்று
தோழர் ஒருவர் - எழுத்தையும்
மருந்தாகப் பாவிக்கலாம் எனத் தூண்டினார்!
பயனுள்ள பொழுதுபோக்காக
விரும்பியதை வாசி/எழுது என்று
எனக்குப் படிப்பித்த ஆசிரியர்மார்
அடிக்கடி நினைவூட்டி இருந்தனர்!
நானும்
நேரம் கிடைக்கின்ற போது
பயனுள்ளதாகப் பொழுதைப் போக்க
எழுதிக் கொண்டே இருக்கிறேன்!
எப்பன் எப்பனாக - என்
எண்ணங்களை எழுதிக் கொண்டிருப்பதும்
உள/மன நிறைவு தரும் முயற்சியே!
ஆக்கம்: யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
எப்படியாவது எல்லாவற்றுக்கும்
உன் முடிவே செல்லுபடி ஆகும்!"
என்றெழுதிச் சிலரிடம் காட்டினேன்!
"நாலு பேரை விசாரித்து
மூன்று பேர் சொன்னதையாவது
முடிவாகக் கொள்ளலாமே!
மாற்றார் முடிவுகள் எப்படி இருக்குமென
பொருட்படுத்தாமல் முடிவு எடுப்பது
முற்றிலும் தவறல்லவா!" என்று
வாசித்தவர் பலர் - ஆளுக்கொரு
எதிர்க்கருத்தை முன்வைத்தனர்!
"எவரும் எதையும் எப்படியும்
எழுதிவிடலாம் - ஆனால்
வாசிப்பவர் விருப்பந்து எழுதினால் மட்டுமே
எழுத்துக்குப் பெறுமதி கிட்டும்!" என்று
தோழி ஒருத்தி
எனக்கு ஊக்கம் தந்தாள்!
"உள்ளம் நிறையக் கிடக்கின்ற
எதனையும் வெளியில் கொட்டி விட்டாள்
உள்ளத்தில் அமைதி கிட்டும் - அதற்கு
எழுத்து நல்ல ஊடகம் ஆகும்!" என்று
தோழர் ஒருவர் - எழுத்தையும்
மருந்தாகப் பாவிக்கலாம் எனத் தூண்டினார்!
பயனுள்ள பொழுதுபோக்காக
விரும்பியதை வாசி/எழுது என்று
எனக்குப் படிப்பித்த ஆசிரியர்மார்
அடிக்கடி நினைவூட்டி இருந்தனர்!
நானும்
நேரம் கிடைக்கின்ற போது
பயனுள்ளதாகப் பொழுதைப் போக்க
எழுதிக் கொண்டே இருக்கிறேன்!
எப்பன் எப்பனாக - என்
எண்ணங்களை எழுதிக் கொண்டிருப்பதும்
உள/மன நிறைவு தரும் முயற்சியே!
ஆக்கம்: யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!