எனது இல்லாளின் இளைய தங்கையின் இனிய மகள் அம்றிதா சுவிஸில் நிகழ்ந்த எழுச்சிக் குயில் 2017 நிகழ்வில் பாடி 'எழுச்சிக் குயில் 2017 (Title Winner)' என வெற்றி பெற வைத்த பாடலைத் தங்களுடன் பகிருகிறேன்.
தொலைபேசி உறவுகள் வந்தன...
குடும்ப
உறவுகள் முறிந்தன...
காதலியைக்
கைவிடலாம்
கைபேசியை
கைவிடலாமோ?
இல்லாளை
விட்டுப் பிரியலாம்
நடைபேசியை
விட்டுப் பிரியலாமோ?
பிள்ளையைப்
போட்டு உடைக்கலாம்
திறன்பேசியைப்
போட்டு உடைக்கலாமோ?
என் இனிய
உறவுகளே! - இன்று
எம்மவருக்கு
எதில் கவனம் வேண்டும்
நல்லுறவைப்
பேண நடைபேசி என்றால்
நல்லுறவைப்
பேணாத நடைபேசி எதற்கு?
விடை காண
முயன்றீரா? - இல்லையெனின்
கிடைத்த
வாழ்வைத் தொலைப்பீரா?
---------------------
இந்தளவு
நாளாக அவனைக் காதலிச்ச இவள், இப்ப ஏன் அவனைக் காதலிக்க மாட்டேன் என்கிறாள்?
அன்றொரு
நாள் ஏழு மணி இரவில, நடைபேசியைத் தேடி அவன் ஓடி மறைய இவள் துயரப்பட்டாளாம்.
ஏன் துயரப்பட்டவளாம்?
ஏதாச்சும் ஆச்சோ?
நடைபேசியைத்
தேடி ஓடுறவனைக் காதலிச்சால், தன் நிலை என்னவாகுமென அஞ்சுகிறாள்...
---------------------
இஞ்சாருங்கோ...
கொஞ்சம் இஞ்ச வாங்கோவேன்...
என்னது...
கொஞ்ச வாவோ...
இல்லையங்கோ...
சுந்தரனும் சுந்தரியும் பிரிஞ்சிட்டினமாம்...
என்னவாம்
நடந்தது?
விழுந்த
கைபேசியை எடுக்கிறேனென்று கையிலிருந்த கைக்குழந்தையை விழுத்திப் போட்டானாம் (சுந்தரன்)
---------------------
என்னங்க
அவரு பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டிட்டு குதிக்கால் தலையில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறாரு!
அதுவா! அவரது
திறன்பேசியை (Apple Phone S8+) அங்கே கைநழுவ விட்டிட்டாராம். அதையெடுக்க ஓட்டம் பிடிக்கிறாராம்.
---------------------
விரும்பிய
எல்லாம் அடையவே
கிடைத்த
வாழ்க்கை இருக்கிறது!
நாம் விரும்பியதை
அடைய - எமக்கு
கிடைத்த
வாழ்வில் வசதியுண்டோ?
எண்ணிப்
பாருங்க உறவுகளே!
உறவுகளே
உள்ளம் கெட்டு
பட்டு நொந்து
வீழ்வதால்
வாழ்வில்
முன்னேற இடமுண்டோ?
வீரலுக்கேற்ற
வீக்கம் என்பார்கள் - அது
வரவுகேற்ப
செலவு செய் என்பதற்கே!
நின்ற வெள்ளத்தை
வந்த வெள்ளம்
அடித்துச்
சென்றதாக இருக்கக் கூடாதாம் - அது
உண்மையான
உறவுகளை விட்டிட்டு
புதிய உறவுகளை
நாடாதே என்றணர்த்தவே!
கல்வி, காதல்,
திருமணம், குடும்பம், வருவாய்,
செலவு உடன்
அன்பும் உறவும் ஒழுங்காக
பேணத் தவறினால்
வாழ்வு என்னவாகும்?
நடைபேசியால்
சீரழியும் குடுப்ப வாழ்வை
எண்ணிப்
பார்த்துச் சீராக்கினால் மகிழ்ச்சியே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!