(இப்பதிவில்
வரும் 'நீ', 'நான்' என்ற இருவரும் நானே! எனது பதிவை விளங்க வைக்க அப்படி எழுதியுள்ளேன்.)
நீ:
என்னங்க...
அவர் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசினாலும் அழுமூஞ்சியாகவே இருக்கிறார்?
நான்:
நகைச்சுவையாகப்
பேசிறவருக்கும் நகைச்சுவையாக எழுதிறவருக்கும் பின்னால் சொல்ல முடியாதளவு துயரங்கள்,
துன்பங்கள் இருக்குமே!
அந்தத் துயரங்கள்,
துன்பங்கள் எல்லவற்றையும் மறைக்கத் தானே
இந்த நகைச்சுவைப்
பேச்சும் எழுத்தும் என்பேனே! - அப்படி
நான் சொல்ல
வில்லை!
நீ:
அப்ப யாரு
சொன்னாங்க...
நான்:
முன்னணி
நகைச்சுவைப் படைப்பாளியோ நகைச்சுவை நடிகரோ சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த ஆள் எவரென்று
சொல்ல முடியல...
நீ:
அப்ப எதைத்
தான் சொல்ல வாறிங்கள்...
நான்:
நான் பணமின்றி
இருந்த வேளை
என்னை விரும்ப
எவரும் நெருங்க வில்லை...
நான் பிச்சைக்காரனாக
இருந்த வேளை
என் வீட்டு
நாயும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை...
நான் வேலையின்றி
இருந்த வேளை
என்னை மணமுடிக்க
மறுத்துப் பலர் ஓடி மறைந்தனர்...
நான் பணக்காரனாக
இருந்த வேளை
என்னைக்
காதலிக்கப் பலர் பின் தொடர்ந்தனர்...
ஆனால்,
நான் பிச்சைக்காரனாக
இருந்த வேளை
சத்தியபாமா
என்றொருத்தி
என்னைக்
கட்டிப் போட்டாள் என்றதும்
(அட, நான்
அவளுக்கு
மஞ்சள் கயிறு
கட்டியதைச் சொன்னதும்)
உந்தக் கிழவன்
எமக்கு வேண்டாமென
எந்தன் பணத்தை
விட கற்புப் பெரிதென
(ஒருத்தனுக்கு
ஒருத்தி என்ற
எல்லையை
மீறும் ஆண்களுக்கும்
கற்பில்லையே!)
குதிக்கால்
தலையிலடிக்க ஓட்டம்பிடித்தனரே...
நீ:
எப்படியோ,
உங்கள் கிறுக்கல் பரவாயில்லை. ஆனால், நீங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லவில்லையே!
நான்:
"பணமில்லை
என்றால் - உன்னை
உன் வீட்டு
நாயும் திரும்பிப் பாராது...
பணமிருக்கு
என்றாலும் - உன்னை
காதலிக்க
விரும்புறவளும் கூட - உனக்கு
கற்பில்லை
என்றால் - உன்னை
காதலிக்க
மாட்டாளே! - இந்த
உண்மையைத்
தானே - எந்த
ஆண்களும்
உணரத்தானே வேணும்!" என்ற
செய்தியைத் தானே சொல்ல வந்தேன்!
நீ:
அப்ப பெண்ணுக்கு
மட்டும்
கற்பு உரித்தல்ல
- இப்ப
ஆணுக்கும்
கற்புத் தேவை!
நான்:
கற்பு என்பது
ஒழுக்கம்
அது
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
பொதுவானதே!
ஒருத்தனுக்கு
ஒருத்தி என்ற
எல்லையை
மீறாதவர்கள்
கற்புள்ள
ஆணும் பெண்ணுமே!
நீ:
நகைச்சுவையாக...
என்று சொல்லி "கற்பு" என்று கிறுக்கிறியே!
நான்:
கற்புள்ள
பெண்ணின் பெற்றோர், அவருக்கு பெண் கொடுக்க மாட்டார்களாமே!
மாப்பிள்ளை
முதற் பெண்ணை மணமுறிப்புச் (விவாகரத்துச்) செய்தவராமே!
நீ:
என்னண்ணே!
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே!
நான்:
முதலில விளங்காது,
கொஞ்சம் சிந்தித்தால் விளங்கும். அது தான் நகைச்சுவை!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!