தொடர்கதை
ஒன்றைப் படித்து முடித்தது போல...
திரைப்படம்
ஒன்றைப் பார்த்து இருப்போம்!
சிறுகதை
ஒன்றைப் படித்து முடித்தது போல...
குறும்திரைப்படம்
ஒன்றைப் பார்த்து இருப்போம்!
பிறந்து,
வளர்ந்து, வாழ்ந்து, இறந்து என
ஒரு குடும்ப
வாழ்வையே வெளிப்படுத்தும்
தொடர்கதை,
திரைப்படம் போலன்றி
குறுகிய
கால வாழ்வினைப் பொறுக்கியே
சிறுகதையும்
குறும்திரைப்படமும் வெளிப்படுத்துமே!
மின்வெட்டு
நேரத்திற்குள்ளே நடந்து முடிந்ததை
சிறுகதையும்
குறும்திரைப்படமும் சொல்லி முடித்தாலும்
கதையில்
வரும் கதாபாத்திரம் போல
திரைப்படத்தில்
வரும் நடிப்புப் பாத்திரம் இருக்குமே!
என்னடா!
நான் இப்படி சொன்னேன்டா
என்றடி போட
எப்படியோ முயல்வீரோ
அப்படி
"மகிழ்வான மணநாள் வாழ்வு" என்ற
குறும்திரைப்படத்தைப்
பார்த்த பின் - எனது
ஒப்பீட்டுக்
கருத்தை ஒருக்கால் எண்ணிப்பாரும்!
இந்தக் குறும்திரைப்படத்தைப்
பலரும் பார்த்தனராம்
இந்தக் குறும்திரைப்படத்தில
இரண்டு மொழிகளாம்
பேச்சு மொழியை
விட உடல் மொழியால நகர்ந்த
நடிப்புப்
பாத்திரம் நன்றே வெளிக்கொணர்ந்த
வாழ்க்கையில்
புரிந்துணர்வு வேண்டுமென்ற உண்மையை
இயல்பாய்
வெளிப்படுத்தும் மின்னூடகம் என்றனராம்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!