Translate Tamil to any languages.

வியாழன், 8 ஜூன், 2017

தமிழே துணை!


நான் எழுத எண்ணிய
பா / கவிதை
எனக்குக் கிட்டாமல் போகவே
என் உள்ளத்தில் ஏதோ ஒண்ணு
பாவாக /கவிதையாக
வந்து நின்ற வேளை - நானும்
எழுதி முடிக்க - அது
நல்ல பாவாகவே /கவிதையாகவே இருந்தது!

காதலைப் பற்றி எழுத
எண்ணிய வேளை தான்...
பா / கவிதை வரவில்லை - ஆனால்
உள்ளத்தில் உருண்டதோ
கொடுப்பனவுகள் (சீதனம், ஆதனம்) தான்!

"காணி, பணம், பொன்நகை என
அதிகமாக நீட்டுவோர் நாடினால்
தம்பி தாலி கட்டுவான்...
பெண்ணின் நிலை
தாலி கட்டிய மறுநாளே
தம்பிக்குத் தெரிய வருமே!

அதை, இதை, உதையென
சீர் வரிசை கொடுத்துப் போட்டு
பெறுமதியில்லா பெண்ணையும் தள்ளிப்போட்டு
பெண்ணைப் பெற்றவர்கள் மறைய
கொடுப்பனவுகளை (சீதனம், ஆதனம்) நம்பிய
தம்பி தான் திண்டாட்டம்!

கொடுப்பனவுகளை (சீதனம், ஆதனம்) நீட்டமுடியாத
எல்லாமும் நிறைந்த புன்நகை சிந்தும்
ஏழைப் பெண் கிட்டாத தம்பிமாரே
உங்களை மகிழ்ச்சிப்படுத்துபவள் இன்றி
தூக்கில தொங்கிச் சாகாதீங்க...
கொடுப்பனவுகள் (சீதனம், ஆதனம்) கேட்டால்
மகிழ்ச்சிப்படுத்துபவள் கிட்டாள் தான்!" என

நல்ல கவிதை வந்தமைந்ததே! - நானும்
உள்ளம் நிறைவோடு எழுதினேனே!
வராத பா / கவிதை ஒன்றிற்காக
வந்த பாவை / கவிதையை இழக்காமல்
எழுதி முடித்ததில் கிடைத்த நிறைவு
என்றும் கிடைக்கத் தமிழே துணை!

"அ" என ஒலிக்கவும் "ஆ" என அலறவும்
உதவும் எழுத்துகளால் எழுதவே சுகம்!
சுகமாக எழுதியதால் வெளியான செய்தி
வாசகன் உள்ளம் நிறைவடைய உதவினால்
என்னெழுத்துத் தருகின்ற மகிழ்ச்சிக்கு நிகரேது?
நானென்றும் எழுதிமகிழத் தமிழே துணை!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!