பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் கையில் தான் இருக்கு!
எப்படிப் பிறந்தோம்
எப்போது பிறந்தோம்
என்றறியாமல் தான் வாழ்கிறோம்!
இறப்பு ஒன்று இருக்கு - அது
எப்போது நிகழும்
என்றறியாமல் தான் வாழ்கிறோம்!
விரைவாய் இறந்து விடுவோமென்று நினைப்பதும்
துன்பப்படும் வேளை கூட
துன்பம் தாங்க முடியாமல்
இறந்து விட்டால் மேலென்று நினைப்பதும்
ஒருபோதும் இடம்பெறாது - அது
ஆண்டவன் குறித்த நாளில் தான்
நடக்கும் காணும்!
நான் இறந்து விட்டால்
மறுபிறப்பு ஒன்று இருந்துவிட்டால்
பூச்சியாய், புழுவாய், பறவையாய்,
பாம்பாய், மிருகமாய், மரமாய்
பிறப்பேனா இல்லையேல் - மீண்டும்
மனிதப் பிறவி கிட்டுமா
என்றெல்லாம் நினைத்தால் - அதுவும்
ஆண்டவன் கையில் தான் இருக்கு!
பிறப்புக்கும் இறப்புக்கும இடையே
இடம்பெறும் வாழ்கை மட்டுமே
எங்கள் கையில் இருக்கு - அதனை
நன்றாகச் சுவைத்து வாழ்ந்திட
பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு எதனையும்
தலையில போட்டு உடைக்காமல் வாழ்ந்திடு!

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!