Translate Tamil to any languages.

சனி, 12 மே, 2018

சும்மா சொல்லக் கூடாது!


"நல்ல மனைவியைத் தெரிவு செய்வதில் தவறியவர்
கடைசியில் சாவையே தெரிவு செய்ய முனைகின்றார்" என
பாவரசர் கண்ணதாசன் சொன்ன நினைவு!
சும்மா சொல்லக் கூடாது - சற்று
நம்மாளுங்க மூளைக்கு வேலை கொடுப்பாங்களா?
"நல்ல கணவனைத் தெரிவு செய்வதில் தவறியவர்
கடைசியில் தாலிக்கொடியைத் தூக்குக்கொடி ஆக்குகின்றார்" என
நல்ல மனைவிமாரின் சாவு பறைசாற்றுகிறதே!
சும்மா சொல்லக் கூடாது - எப்பவும்
நாலு ஆளை நல்லா கேட்டறிந்து (விசாரித்து)
நல்ல ஆளைத் தெரிவு செய்வதில் வெல்லுங்கள்!
அது தான் பாருங்கோ - நம்மாளுங்க
முடிவு எடுப்பதில் தவறு செய்வதனாலேயே
தம் வாழ்வுக்கு முடிவு தேடுவது ஆச்சோ!

முடிவு எடுக்கும் போது
அக்கம், பக்கம், முன், பின்,
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்,
நேர் எண்ணம், எதிர் எண்ணம்,
நேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம் என
எல்லா வழியிலும் கிட்டும் விளைவுகளை
நல்லா எண்ணிப் பார்த்தே முடிவு எடுக்க வேணும்!
முடிவு எடுக்கும் போது தவறிவிட்டால்
முன்னேறும் போது இடறி விழலாம்...
சும்மா சொல்லக் கூடாது - நாம்
எடுக்கின்ற முடிவிலேயே நல்வாழ்வும் இருக்கிறதே!

முடிவு எடுத்தலை இலகுவாக்கக் கீழ்வரும் பதிவையும் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!