அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றதால்
எனக்கும் இல்லாளுக்கும்
மணமுறிவில்லைப் பாருங்கோ!
இந்தக் காலத்தில அன்புக்கும் கூட
பணம் தான் அளவுகோலாம்!
பணம் உண்டெனின்
அன்பைப் பொழிவாங்களாம்!
பணம் இல்லையெனின்
ஆளையே மாற்றிப் போடுவாங்களாம்!
பணத்தை அளவுகோலாகக் கொண்டு
அன்பு, நட்பு, காதல், திருமணம்
எல்லாம் இடம்பெற்ற பின்னே...
பணம் இல்லாத வேளை பார்த்து
அன்பு முறிவு, நட்பு முறிவு, காதல் முறிவு,
ஈற்றில் திருமண முறிவும் அமையுமாமே!
பணம் உறவுக்கு அளவுகோலா?
இல்லையே! - அது
உறவைப் பிரிக்கும் ஊடகமே!
அன்பு, நட்பு, காதல், திருமணம் - எதனையும்
பணத்தை வைத்து அரங்கேற்றாதீர்கள்! - பணம்
கைக்குக் கைமாறும் குணம் கொண்டது - அதேபோல
ஆள்களும் ஆளை ஆள் மாற்றுவாங்களே!
இந்தக் காதல் புளிக்கும்!
பணத் தாளிலும் சரி
வெள்ளைத் தாளிலும் சரி
நீங்கள்
கிறுக்கிப் பரிமாறும் எண்ணங்களால்
காதல் மலராது பாரும்!
உள்ளத்தில் கிறுக்கினால் தான்
வெள்ளம் போல காதல் அலை
பொங்கி எழுமாம்! - அதற்கு
அன்பான சொல்களால் தான்
அடுத்தவர் உள்ளத்தில் கிறுக்கலாமாம்!
பட்டென்று கோபம் கொள்வோருக்கும்
சட்டென்று சுடுசொல் பேசுவோருக்கும்
வெட்டென்று விலகிச் செல்லுமாம்
காதல் - அது அவர்களுக்கு
எட்டாக்கனியாகப் புளிக்குமாமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!