பலர் முன்னே
ஒருவரை மற்றொருவர்
பிறர் மதிக்காமல் செய்தார்...
நேரில் கண்ட பலரும்
துயரப்பட்டுச் செல்ல
மதிப்பிழந்தவர் மட்டும்
சிரித்துக்கொண்டே சென்றார்...
பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
மதிப்பிழந்தவரைப் பார்த்து
"பார்வையாளர் துயரப்பட
பாதிப்புற்றவர் சிரிக்கலாமோ?" என்றாரே!
தங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது
கழுவினால் போய்விடுமே...
தங்கம் கறுப்பது இல்லையே! - அது போல
எனக்குள்ள மதிப்பை - எவரும்
இழக்கச் செய்தாலென்ன
இல்லாமல் செய்தாலென்ன
எள்ளளவேனும் குறைய
வாய்ப்பில்லைக் காணும் என்றார்
பதிலுக்குப் பாதிப்புற்றவரும்!
என்னை மதிக்காமல் செய்தாரே - அவருக்கே
மதிப்பவர் எவரும் இல்லையே - அங்கே
மதிப்பில்லைக் காணும் அவருக்கே - அதுவே
பழிக்குப் பழி என்றே
பாதிப்புற்றவரும் பகிர்ந்தாரே!
Translate Tamil to any languages. |
புதன், 8 ஏப்ரல், 2015
பழிக்குப் பழி
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
சிலரின் மதிப்பு என்றும் குறையாது ஐயா. அருமையான கவிதை.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
பழிக்கு பழி வாங்க சிறந்த வழி!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
சிந்திக்க வைத்தன வரிகள் அருமை நண்பரே...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது
கழுவினால் போய்விடுமே...
தங்கம் கறுப்பது இல்லையே!
அருமை.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.