நேற்று வரை
நான் படிக்கவில்லை,,,
இன்று தானே
நானே பட்டுக்கெட்டேன்...
நீயாவது எண்ணிப்பாரேன்
அப்பன், ஆத்தாள்
உள்ள வேளை - எனக்கு
ஒரு வேளை உணவுக்கே
தட்டுப்பாடே வந்ததில்லை!
பிறவூருக்குச் சென்ற வேளை
வயிறு கடிக்கக் கை கடித்தது...
கை கடிக்க வயிறு கடித்தது...
நிலைத்த வருவாய் இல்லையேல்
கடிக்குக் கடிதானென
நானே தான்...
பட்டேன்... கெட்டேன்... அறிந்தேன்!
நாளை வரும் நாளில்
நன்மை வந்து சேர
பட்டறிவு புகட்டிய பாடங்கள் வழிகாட்ட
வெற்றி வந்து சேரும் வேளை
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையே!
பெற்றோர் சொல்லித் தந்ததை
உற்றார், உறவுகள் வழிகாட்டியதை
ஆசிரியர்கள்
அடித்தும் திட்டியும் தந்த பின்னூட்டலை
என் பிடரிக்குள் ஏற்றி
எதிலும் இறங்கி இருந்தால்
எப்படியோ - நான்
இப்படியும் பட்டுக் கெட்டிருக்க மாட்டேனே!
ஒன்றுமில்லாதவராகி
ஒருவருமில்லாதவராகி
பட்டுக் கெட்டவராகி
பட்டறிவு வழிகாட்டும் வழிச் செல்லும்
என் நிலைமையைப் பாரும் - அதுவே
ஊருக்கு அறிவுரை (உபதேசம்) ஆக
பட்டுக் கெட்டுப் பதப்பட்டு - நானும்
பிழைத்துக் கொண்டிருக்கிறேனே!
Translate Tamil to any languages. |
ஞாயிறு, 26 ஏப்ரல், 2015
பட்டறிவும் பிழைப்பும்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
''.ஒருவருமில்லாதவராகி
பதிலளிநீக்குபட்டுக் கெட்டவராகி
பட்டறிவு வழிகாட்டும் வழிச் செல்லும்...'''
இதுவும் ஒரு பாடம் தான்.sakothara...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
// நானே தான்...
பதிலளிநீக்குபட்டேன்... கெட்டேன்... அறிந்தேன்!
நாளை வரும் நாளில்
நன்மை வந்து சேர
பட்டறிவு புகட்டிய பாடங்கள் வழிகாட்ட
வெற்றி வந்து சேரும் வேளை
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையே! //
அருமை! அருமை, அய்யா! தாங்கள் பட்டதையும், கெட்டதையும், அறிந்ததையும் – வாழ்வியல் சிந்தனைகளாக வலைப்பதிவினில் (கட்டுரை வடிவினில்) சொன்னால் மற்றவர்களுக்கு, வழிகாட்டியாய் அமைந்திடும்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
பட்டதையும், கெட்டதையும், அறிந்ததையும் – வாழ்வியல் சிந்தனைகளாக வலைப்பதிவினில் (கட்டுரை வடிவினில்) சொல்வதற்காக கீழ்வரும் தளத்தைப் பேணுகிறேன்.
http://mhcd7.wordpress.com/
அருமை நண்பரே அனைத்தும் வாழ்வியல் உண்மைகள்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
ஊருக்கு அறிவுரை (உபதேசம்) ஆக
பதிலளிநீக்குபட்டுக் கெட்டுப் பதப்பட்டு - நானும்
பிழைத்துக் கொண்டிருக்கிறேனே,
உண்மை. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது. பட்டுதான் பழக வேண்டும் வாழ்வின் செயல்களை. நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
#நானும் பிழைத்துக் கொண்டிருக்கிறேனே!#அதை நாங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறேன் :)
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நேற்று வரை
பதிலளிநீக்குநான் படிக்கவில்லை,,,
இன்று தானே
நானே பட்டுக்கெட்டேன்...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஆழ்ந்த சிந்தனையுடன் பட்டறிவு பற்றி நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்..வாழ்க்கையில் சொல்லித் தெரிவதை விட அனுபவ பாடம் என்பதொன்று கற்றுத் தருவது அதிகமல்லவா.? எதையும் பட்டு தெரிந்து கொள்ளும் போது பிழைக்கும் வழிகளும் ,பாதைகளும் கண்முன்னே தெரியத்தானே செய்யும். உண்மை நிலையை விளக்கியமைக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.