ஈழம் எங்கும்
தமிழர் வாழ்ந்த காலம் போய்
தமிழர் இடங்களுக்கு
சிங்களப் பெயர் சூட்டி
அரசும் அரச காவலர்களும்
சிங்களவரைக் குடியேற்றுவது தொடர...
பிள்ளையார் வீற்றிருக்கும்
அரச மரங்களிற்குக் கீழே
புத்தரை இருத்தி
பௌத்த கோவில்களையும் கட்ட...
ஈழம் சிங்கள நாடாகிறது...
ஈழத் தமிழர்
ஏதிலியாக உலகைச் சுற்ற
தமிழ் தலைவர்கள்
தூங்கிக் கொண்டிருக்கையில்
விடிய விடிய
எதிர்த்தவர் புலியெனச் சாகடித்து
ஈழம் எங்கும் சிங்களத் தலைகள்
நீளத் தொடங்கி விட்டன...
காலப் போக்கில்
எஞ்சியோரையும் சிங்களம் விரட்டினால்
வெளிநாட்டிலும் இடமில்லாட்டி
நடுக்கடலில்
விழவேண்டிய நிலை தான்
ஈழத் தமிழருக்கு - இந்தச் செய்தி
உலகத் தமிழரின் காதுக்கு எட்டுமா!
Translate Tamil to any languages. |
சனி, 26 ஜூலை, 2014
ஈழம் சிங்கள நாடாகிறது...
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
காலம் ஒருநாள் கைகூடும் நண்பரே அதுவரை பொருத்திருப்போம்.
பதிலளிநீக்குஐ. நா. விசாரணை நடத்தினால் நிறுத்தலாம் - அது
நீக்குஎப்போது கைகூடும்?
போகிற போக்கைப் பார்த்தால், காலம் கைகூடும் போது எங்களின் வீடுகள் ஊர்களிலெல்லாம் சிங்களவர்கள் தான் வாழ்வார்கள் போலிருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை தான்...
நீக்குஐ. நா. விசாரணை நடத்தினால் நிறுத்தலாம் - அது
எப்போது கைகூடும்?
விடியல் வரும் ஐயா..
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குபட்ட துன்பங்கள் பட்ட துயரங்கள் எல்லாம் ஆறமுன் இப்படியும் ஒரு வேதனையான சம்பவமா காலம் பதில் சொல்லும் விரைவில் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
என்று தீருமோ இந்த துயரம் ?
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.