Translate Tamil to any languages.

சனி, 5 ஜூலை, 2014

இப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்?

கே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின் வெளியே வந்த போது கவுண்டமணி, செந்திலைக் கண்டேன்.

செந்தில்: அண்ணே! எனக்கொரு ஐயம் அண்ணே!

கவுண்டமணி: அப்படி என்னடா ஐயம்!

செந்தில்: தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே! அதெப்படி அண்ணே!

கவுண்டமணி: அதுவா... இங்கால கொஞ்சம் வாடா... சொல்லுறேன்!

செந்தில்: இங்கால நின்றால் உங்களால முடியாதோ?

கவுண்டமணி: இல்லை! இங்கால வந்தால் தானடா முடியுமடா...

கவுண்டமணிக்குக் கிட்டச் செந்தில் நெருங்கினார். கவுண்டமணியோ ஓர் உதை விட, செந்தில் பிடரி அடிபட விழுந்தார்.

செந்தில்: கிட்ட வைச்சு உதைக்கலாமோ அண்ணே!

கவுண்டமணி: இப்ப உங்களுக்குத் தலையிடி எப்படி?

செந்தில்: உங்கட உதையால வந்த தலையிடி அண்ணே!

கவுண்டமணி: உதைத்தான் சொல்லுறது; தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்று!

செந்தில்: போங்க அண்ணே! உதை உதையில்லாமல் சொல்லேலாதோ!

கவுண்டமணி: உதை தானே உதை உனக்கு உணர்த்திச்சு!

இதையெல்லாம் கண்டு களித்த பின், நான் அவ்விடத்தை விட்டு அகன்று நன்னூல்.கொம் செயலகத்திற்குச் செல்ல அம்பாள் நகரிற்குப் புறப்பட்டேன்.


7 கருத்துகள் :

  1. நல்லயிருக்கே கோமடி,,, சினிமாவுல வசனகர்த்தாவுக்கு முயற்சி பண்ணுங்க.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. #கே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின்#
    அங்கே சென்று வந்ததால் உண்டான வசனமா இது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2011 சித்திரை கத்திரி வெயில் தலையைப் பிளக்க சென்னை கே.கே. நகரில் தான் தங்கியிருந்தேன். அதனை நினைவிற்கொள்ள இதனை எழுதினேன். மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்பது சரி...!

    யோசிக்கக்க்வும் ஐயா ---> அடுத்த எனது பதிவு இதைப் பற்றித் தான்...!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    நல்ல உரையாடல் வடிவில் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்அடுத்த பகுதி என்ன காத்திருக்கேன்.பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!