Translate Tamil to any languages.

வியாழன், 31 ஜூலை, 2014

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?

ஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்

கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...

கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.

கட்சித் தொண்டன் : அதெப்படி?

கட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.

கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...

8 கருத்துகள் :

  1. ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல...தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்று படாமல் வெற்றுக் கூச்சலும்
    போராட்டம் நடத்துவது! என்பதே சரி!

    பதிலளிநீக்கு
  2. இங்கிருக்கும் அரசியல்வாதிகள் தமிழகம் ,தமிழினம் என்று வாய்கிழிய கத்துவார்கள் ,ஆனால் ஒன்று சேராமல் தனி ஆவர்த்தனம் வாசிப்பார்கள் !

    பதிலளிநீக்கு
  3. நமது அரசியல்வாதிகள் வாய்சொல்லில் வீரர்களே...
    காரியத்தில் காணாமல் போய் விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. அணையை உடைப்பது சிரமம் ஏனென்றால் அணை வலுவாக உள்ளது. அதைவிட சிரமம் இல்லாதது இது...திரைப்படத்துறையில் அநீதியை தட்டிக்கேட்கும் வீராதி வீரராக, வலம் வந்தாலே அவருக்கு தகுதி தானாக வந்துவிடும். பல பட்டங்களை ரசிகர்களும் வழங்கிவிடுவார்கள்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!