வானிலே
கடலிலே
காற்றிலே
காட்டிலே
மேட்டிலே
வீட்டிலே
பள்ளியிலே
மத வழிபாட்டு இடங்களிலே
அரசப் பணி இடங்களிலே
அடடே
அரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே
காதலிலே
திருமணத்திலே
பிள்ளைப் பேற்றிலே
மருத்துவ மனைகளிலே
சுடுகாட்டிலே
இடுகாட்டிலே
நடுவழியிலே
எடுத்துக்காட்டாக
எத்தனை எத்தனை
இன்னும் உள்ளனவோ
அத்தனையிலும்
பணம் இருந்தால் போதும்
வென்றுவிடலாம்...
ஆண்டவனை வழிபடக் கூட
பணம் வேண்டினால் - ஏழை
பணம் வைத்திருப்பவனையா
வழிபட வேண்டும்?
அட கடவுளே...
பணம் பத்தும் செய்யுமென்றால்
ஏழைகள்
கடவுளை வழிபடாமல் இருக்கவும்
பணம் குறுக்கே வந்து நிற்கிறதே!
2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.
Translate Tamil to any languages. |
புதன், 30 ஜூலை, 2014
பணம் பத்தும் செய்கிறது
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கடவுளை வழி பட பணம் தேவையில்லையே! நண்பரே! கோயிலுக்குச் செல்லாமலேயே, இருக்கும் இடத்திலேயே தியானித்து வழிபடலாமே.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.