Translate Tamil to any languages.

செவ்வாய், 15 ஜூலை, 2014

கைக்குக் கைமாறும் பணமே - 06

கடற்காற்றோடு கலந்து வீசிய
அயலாள் பெருமாள் வீட்டு
"ஐயோ! அம்மோய்!" என்றழுகை
பைங்கிளி வீட்டிற்குள் நுழைய
வேலனும் பொன்னனும் வேளைக்கே
பெருமாள் வீட்டிற்குள்ளே இறங்க
பெருமாளுக்கு உடம்பு சரியில்லையென
பெண்டாட்டி போட்ட கூப்பாட்டிலே
கடற்கரையூரும் திரண்டு நின்றதே!

திரண்டு நின்றவர்களோ சொன்னார்கள்
முரண்டு பிடிக்காமல் செல்லுங்கள்
உடனேயே மருத்துவ மனைக்கென
உடனே வேலனும் பொன்னனும்
நம்ம பைங்கிளி இருக்க
சும்மா எங்கேனும் போகணுமா?
எங்கேயும் போகவும் வேண்டாம்
இங்கேயே பைங்கிளி வந்திட்டாளென
வந்துகொண்டே பெத்தவள் சொன்னாளே!

எங்கட பெருமாளுக்கு என்னவாச்சு
உங்கட பைங்கிளி வந்தாச்சென
பைங்கிளியைப் பெத்தவள் விசாரிக்க
பெருமாளும் நடந்ததைச் சொல்ல
பைங்கிளியோ கைநாடி பார்த்தாள்
ஏதோ காதுக்க செருகியவள்
பெருமாளின் நெஞ்சில முதுகில
வைத்துச் சோதித்துப் பார்த்தாள்
மருந்தையும் பருக்கியும் விட்டாளே!

திரண்ட கடற்கரையூரார் கண்டது
பைங்கிளியின் மருத்துவப் பணியா
பைங்கிளியாள் குடும்பத்தார் நற்குணமா
என்னமோ மருத்துவர் பைங்கிளியா
கடற்கரையூரின் கலங்கரை விளக்கா
பைங்கிளி மணமாகி விட்டாளா
பைங்கிளியின் மணமகன் நம்மூரா
பிறவூரானுக்குக் கழுத்தை நீட்டுவாளா
கடற்கரையூரார் வாய்கள் ஓயாதோ?
(தொடரும்)

6 கருத்துகள் :

  1. மேலும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் அடுத்த தொடருக்காக காத்திருக்கேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. தொடர்கவிதை போலிருக்கிறதே! முந்தைய பகுதிகள் படிக்கவில்லை! நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!