ஓடும் பழமும் (புளியம்பழம்)
ஒட்டிக் கொள்ளாதது போல
உலாவும் உறவுகளை விட
தோலும் தசையும் (மனிதவுடல்)
ஒட்டிக் கொண்டது போல
உலாவும் உறவுகள் நன்று!
தமது கோட்டுக்குள்ளே
அடக்கி ஆள எண்ணுவோரை விட
ஆண்டி ஆனாலும்
அரசனை நம்பியவர் போல
நாம் கீறிய
கோட்டைத் தாண்டாதவர் மேல்!
எப்படி இருப்பினும்
எப்படியும் எப்போதும் எது வரினும்
ஒருவருக்கொருவர்
தமது விருப்பு, வெறுப்புகளை ஏற்று
சமநிலை உணர்வோடு உலாவும்
உறவு நிலையே உயர்வானது!
உறவுகளையும், நட்புகளையும் அழகாக கோர்வையாக ஒருகவிதை அருமை.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
எந்த உறவாக இருந்தாலும் சரி தங்கள் சொல்லி யிருப்பது போல "accept people as they are" என்பதே நல்லது! நல்ல கவிதை!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.