தமிழ்நாட்டில் பிறந்தால்
திரைப்பட நடிகராக வேண்டும்...
திரைப்பட நடிகரானால்
சிவாஜிகணேசனைப் போல
நடிக்க வேண்டும்;
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
ஏழை மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்!
திரைப்பட நடிகரான பின்னே
நடிப்பை மட்டும் நம்பினாலும்
ஏழைகளின் தோழனான
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
தமிழ்நாட்டு முதலமைச்சராக வேண்டும்!
எம்.ஜி.இராமச்சந்திரனால் முடிந்தது
என்னால் முடியுமா என்று
என்னை
நானே மதிப்பீடு செய்து பார்த்தேன்...
கடவுளிடம் இறக்கை வேண்டி
பறந்து போனாலும் கூட
முதலமைச்சர் இருக்கையைத் தானும்
எட்டி பார்க்க முடியாத
உனக்கெல்லாம்
எம்.ஜி.ஆரைப் போல வர
எண்ணம் இருந்தும் பயனில்லையென
கண்டி ஆச்சி சொன்னாள்!
நெஞ்சு முட்டத் துயரம்
எனக்குள்ளே முட்டி மோதியது...
திரைப்படத்தில் நடித்தாலும் கூட
மக்கள் முன்னே நடிக்காமல்
மக்களுக்குள்ளே மக்களாக வாழ்ந்தமையால்
எம்.ஜி.ஆர். முதலமைச்சரானாரெனப் படித்தேன்!
இப்பவெல்லாம்
இரண்டு, மூன்று படங்கள்
நடிச்சாப் போதும் கட்சியே தொடங்கிறாங்க...
முதலமைச்சராகத் தானே நடிக்கவும் வாறாங்க...
நான் படிச்சதிலே
சித்திடைய வாய்ப்புண்டா என
எண்ணிப் பார்த்தேன்...
மக்களுக்குள்ளே நடிக்காமல்
திரைப்படத்தில் நடித்தாலும்
கோடிக்கணக்கில வேண்டிச் சேர்த்தாலும்
தனக்கு மிஞ்சிய எல்லாவற்றையுமே
ஏழைகளுக்குக் கொடுத்து உதவினால் போதும்
எம்.ஜி.ஆரைப் போல முதலமைச்சர் ஆகலாமென
வடலூர் அண்ணன்
அடிச்சுச் சொன்ன பிறகு - என்னால
அமைதியாக இருக்க முடியேல்லையே!
என் நெஞ்சில் இருக்கும் இறைவா!
எனக்கு இன்னொரு பிறப்பு உண்டெனில்
தமிழ்நாட்டிலேயே
என்னைப் பிறக்க வைத்துவிடு
எம்.ஜி.ஆரைப் போல
நானும் முதலமைச்சராகத் தானே!
குறிப்பு: எம்.ஜி.ஆரைப் போல பணி செய்யாமல், அவரைப் போல முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
சொன்ன விதம் அருமை ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஆமாமா... யாயாரோ.. ஆசைப்படுறாங்க,,, நீங்கக மட்டும் என்ன...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஆம் இங்கு தமிழ்நாட்டில் எம் ஜி ஆரைப் போல பலர் வருவதற்குத்தான் துடிக்கின்றார்கள் அவரது பெயரைச் சொல்லி....ஆனால் அவரைப் போல வர முடியுமா இவ்ர்களால்?!! நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்! நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இன்னொரு எம்ஜிஆர்! வாய்ப்பே இல்லை. இயற்கையின் அம்சமே ஒரு தடவைதான்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஆசைக்கு கஞ்சதனமே.................. கூடாது .... விஞ்ஞானி கலாம் சொல்வாரு கனவு கானுங்கள் என்று.........
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குவரிக்கு வரி மிக அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இப்படித்தான் பல பேரின் மனநிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதை அருமையாக வெளிப்படுத்தினீர்கள்.
பதிலளிநீக்குசமர்பணம்-- போட்டது அசத்தல்.
நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.