அரசுக்கு வருவாய் இன்மையால்
எடுத்த எடுப்பிலே
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டி
வருவாயைப் பெருக்கக் கணக்குப் போட்டிருக்கே!
என் பால்குடிப் பிள்ளை அழும்போது
மனைவி கேட்கிறாள்
"பிள்ளையைப் பெற முயன்றால் சரியே
பிள்ளைக்குப் பால்மா வேண்டி வா" என்று
பச்சையாகக் கேட்கையிலே
என்
வயிறு பற்றி எரியுதையா
எடுக்கிற சம்பளம் போதாமையாலே!
அட கணக்குப்பிள்ளோய்...
நாங்களும் மக்கள் தானுங்க...
அரசுக்குப் பசிக்குது என்றால்
வருவாயைப் கூட்டுறாங்களே...
எங்கட பசிக்குச் சாப்பிட
எங்கட சம்பள அதிகரிப்பை
அரசு போட்ட கணக்கில
சேர்க்காமல் விட்டால்
எங்கட வயிற்றை
எப்படி வளர்க்கிறதப்பா?
பிச்சைக்காரர் கூட
"அரசு
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டுது
நீங்க மட்டும்
தேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்
எப்படீங்க
நாங்க பால் கோப்பி குடிப்போம்?" என்று
எங்களுக்குத் தொல்லை தாறாங்களே!
Translate Tamil to any languages. |
வெள்ளி, 18 ஜூலை, 2014
வயிறு பற்றி எரியுதையா...
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஅனுபவத்தின் வெளிப்பாடுகவியாக பிறந்த விதம் கண்டு மகிந்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
திருப்தியும் ஒரு சிறந்த மருந்து...!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
புதிய மொந்தை ! பழைய கள்ளு! அவ்வளவு தான் நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அனுபவத்தை கவிதையாய்... அதுவே மருந்தாய்... தந்தாய்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வலியில் பிறந்த கவிதை..ஆழமாக...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
விலைவாசி ஏற்றத்தால் விளைந்த வயிற்று எரிச்சலை அனுபவப் பாடமாய் வடித்துள்ளீர்....என்ன செய்வது ?
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.