Translate Tamil to any languages.

வெள்ளி, 11 ஜூலை, 2014

காலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு


விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)
என்பது
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சு!
என்பது
'அவர்கள் உண்மைகள்' தளத்தில் நானிட்ட கருத்துரை!
மேலுள்ள விரிப்பைப் பார்வையிட
கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.
http://avargal-unmaigal.blogspot.com/2014/07/blog-post.html

மதுரைத் தமிழன் அவர்களின் 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் மேற்காணும் பதிவைப் படித்த பின் கீழ்க்காணும் எனது கண்ணோட்டத்தைக் கருத்தில் கொள்ளவும்.

சரி! உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றிச்சு! பின்னூட்டத்தில்  தெரிவிக்க மறந்து விடாதீர்கள்! என் எண்ணத்தில் பட்டதை அப்படியே கூறுகிறேன்.

படத்தில் கூறிய அந்தக் காலக் காதலை நினைத்தால் ஓர் உண்மை புலப்படும். அன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் வாழ்க்கை மகிழ்வளிக்கத் தேவையானவை மட்டுமே! அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே! அன்று மலர்ந்த காதல் உண்மைக் காதலாக இருக்கும்.

படத்தில் கூறிய இந்தக் காலக் காதலை நினைத்தால் பல உண்மை புலப்படும். இன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் பொழுதுபோக்காக முயல்வோம்; வாழ்க்கையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம் என்பதே! மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ! அதேவேளை கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுறாங்க என்றால் நல்வாழ்வைப் பற்றி இந்தக் காலத்து இளசுகள் எண்ணவில்லைப் போலும்.

இந்தக் காலத்தில ஆண் காதலிக்க முன் கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது போல பெண் காதலிக்க முன் மனைவி (பெண்டில்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது இயல்பு அல்லது தேவை. ஏனெனில் இளமை/காதல் இரு பாலாருக்கும் பொதுவானதே! வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும்! இன்று மலரும் காதல் போலிக் காதலாக இருக்கிறது.

அப்படியாயின் உண்மைக் காதல் எது? காதல் என்றால் அன்பு. ஒருவர் நிலை ஒருவர் அறிந்து நெடுநாள் பழகிக் குடும்பப் பின்னணி அறிந்து மாற்றாருக்கு (கணவன்/மனைவி) உறவில்லை என்பதை உறுதிப்படுத்தித் தனக்கு மட்டும் உரிமை கொண்டாட முடியுமென்றதும் மிகையாக வெளிப்படுத்தப்படும் அன்பு தான் காதல் என்பேன்!

காதல் என்ற போர்வையில் நமது சூழலில் இடம்பெறும் இழிநிலைகளை "பத்திரிகைச் செய்திகளே! http://eluththugal.blogspot.com/2014/07/blog-post_10.html " என்ற எனது பதிவில் படிக்கலாம். காதல் என்ற போர்வையில் நமது இளசுகள் போடும் கூத்துகளுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியாகவே
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சை எடுத்துக் கொள்கிறேன்.

"விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)" என்ற
மதுரைத் தமிழன் அவர்களின் கோட்பாட்டை (தத்துவத்தை) ஏற்று இயல்பாக, இயற்கையாக அமைந்த காதலைக் கணக்கில் எடு; காதல் கைகூடாவிட்டால் கணக்கில் எடுக்காதே அதாவது சாவை அணைக்காதே (தற்கொலையை நாடாதே)!

10 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. என் விளக்கத்தைவிட உங்கள் விளக்கமே சரி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குள் போட்டி வேண்டாம்.
      எமது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே சொல்லியிருக்கிறோம்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஹீ.ஹீ விட்டா இதை வைச்சு ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கி விடுவிங்க போல இருக்குதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தகவல் என் உள்ளத்தைத் தொட்டதால் ஆய்வு செய்தேன். இப்படித் தொடராக ஆய்வு செய்தால் டாக்டர் பட்டத்திற்குப் பதிலாக அடி, உதை தானையா விழும்!

      நீக்கு
  5. எனக்கு ஒரு சந்தேகம் புருஷனையும் பிள்ளைகளையும் விசாரித்து கொண்டு காதல் செய்தால் கள்ளக்காதல் என்கிறீர்களே அப்ப்டியானால் இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்/


    இங்கே அமெரிக்காவில் விவாகரத்து ஆகி குழந்தைகளோட பல பெண்கள் சிங்கிள் அம்மாவாக இருப்பதுண்டு அந்த பெண்னை விரும்பும் ஆண் அவள் முதல் புருஷனையும் அவளின் குழந்தைகளையும் விசாரித்து காதல் செய்தால் அது என்ன கள்ளக்காதலா?

    நிச்சயம் இல்லைதானே அப்ப அதுவும் நல்ல காதல்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்து என்னிடமில்லை.
      ஆயினும்,
      எதிர்கால வாழ்வுக்கு இடையூறு இல்லாமலிருக்க கணவனையோ (புருஷனையோ) மனைவியையோ (பெண்டிலையோ குழந்தைகளையோ விசாரித்த பின் காதலிக்கலாம். அதாவது விவாகரத்து ஆகிய ஆணையோ பெண்ணையோ காதலித்தாலும் நல்ல காதல் தான்.
      ஆனால்,
      மணமுடித்து விவாகரத்து ஆகாத ஒருவரை மணமாகாத ஒருவர் காதலித்தால் கள்ளக் காதல் தானே. இது தானே பலரது குடும்பச் சிக்கலுக்கு ஆணி வேர்!
      மேலும்,
      தங்கள் கருத்தில் பிழையேதும் இல்லை. தங்களது கருத்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து நமது சூழலில் உள்ள சீரழிவைச் சுட்டியுள்ளேன்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!