Translate Tamil to any languages.

புதன், 23 ஜூலை, 2014

களவும் கற்று மற

வகுப்பில நடந்த ஆசிரியர், மாணவர் நாடகம்.

ஆசிரியர் : "களவும் கற்று மற" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்காமல் இருந்தால் சரி!

மாணவர் - 02 : ஐயா! நேற்றுத் தந்த வீட்டுவேலை செய்ய மறந்திட்டேன்!

ஆசிரியர் : வீட்டுவேலை செய்யாதோர் வகுப்பில் இருந்து செய்து முடித்துத் தந்த பின் வீட்டுக்குப் போகலாம்.

இப்பவெல்லாம் மாணவர்கள் இவ்வாறான ஒறுப்பை (தண்டனையை) ஏற்றுக்கொள்கிறாங்களா? எனக்கோ ஐயம் தான்!

8 கருத்துகள் :

  1. மாணவன் வகுப்பில் தண்டனையாக அதிக நேரம் இருக்க வேண்டியிருந்தாலும் ஆசிரியரால் இருக்க முடியாது ,ஏன்னா ,அவர் டியூசன் எடுக்க போக வேண்டி இருக்குமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. களவும் கற்று மற என்பதற்கு இவ்வாறான விளக்கம் இருக்கு என்று இப்ப தான் அறிந்தேன். தங்கள்
    தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகான விளக்கம் முனைவர் ஐயா! கற்றுக் கொண்டோம்!

    பதிலளிநீக்கு
  4. இப்போதுள்ள மாணவர்கள் தண்டனை எல்லாம் ஏற்பதில்லை! நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம்
    நல்ல கற்பனை ... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!