பள்ளித் தோழியும்
பள்ளித் தோழனும்
சந்தித்தே
உள்ளத்துக் கிடக்கைகளை
கொட்டித் தீர்க்க
ஆங்கொரு அரச மர நிழலில்
ஐந்து முகப் பிள்ளையார்...
காதல் என்று கைகுலுக்கிய
பெண்கள் எல்லோரும்
பணம் பறித்துச் சென்றதால்
ஏழையானதாகக் கூறியே
"யாரைத் தான் நம்புவதோ..." என்றான்
பள்ளித் தோழன்...
அழகன் ஒருவன்
அன்பும் அறிவும் பணமும்
இருப்பதாகக் கூறியே
காதல் பண்ண வந்த பின்னே
உள்ளத்துக்குப் பின்னே உடலையுமே
பறித்துச் சென்றதன் பின்னே
"யாரைத் தான் நம்புவதோ..." என்றாள்
பள்ளித் தோழி...
அரச மர நிழலில்
பிள்ளையார் முன்னே
இருக்கவேண்டியதை இழந்த ஆணும்
இழக்கக்கூடாததை இழந்திட்ட பெண்ணும்
கண்ணீர் விட்டுக் கதை கதையளந்தாலும்
ஒருவரை ஒருவர் புரிந்ததால்
ஒருவரை ஒருவர் ஏற்க முடிந்ததாமே!
"யாரைத் தான் நம்புவதோ..." என்று
பி.சுசிலா பாடிய குரலில்
பாடிச் சுற்றும் இளசுகளே
பேண வேண்டியதை
பேணத் தவறினால் பாருங்கோ
பட்ட பின்னே கெட்ட பின்னே
அரசடிப் பிள்ளையார் உதவுவாரென
அழுதும் பயன் கிட்டாதே!
வணக்கம்
பதிலளிநீக்குயாரையும் யார் நம்பினால் இப்படித்தான்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தங்களின் ஏமாற்ற(மு)ம் புரிகிறது நண்பரே...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தன்னை நம்ப வேண்டும் முதலில்....!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இவர்களை பார்க்க வேண்டாம் என்று ஐந்து முகப் பிள்ளையார்...எந்த பக்கம் திரும்பிக்குவாரோ ?
பதிலளிநீக்குபேண வேண்டியதை
பதிலளிநீக்குபேணத் தவறினால் பாருங்கோ
பட்ட பின்னே கெட்ட பின்னே
அரசடிப் பிள்ளையார் உதவுவாரென
அழுதும் பயன் கிட்டாதே!//
நல்ல வரிகள்! கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்?!!!
கண் கெட்ட பின்னே
நீக்குசூரிய நமஸ்காரம் எதற்கு
என்பதைத் தான்
நம்ம சிறுசுகள் படிக்கணும்!
பட்ட பின்னே கெட்ட பின்னே
பதிலளிநீக்குஅரசடிப் பிள்ளையார் உதவுவாரென
அழுதும் பயன் கிட்டாதே!
நன்றாக சொல்லி உள்ளீர்கள்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கவிதை நன்று!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி