வேளைக்கே செத்துவிடத்தான்
ஆனால்,
படைத்தவன் தான்
இன்னும்
என்னை அழிக்க முன்வரவில்லை!
எனக்கும் விருப்பம் தான்
அடிக்கடி தவறுகளைச் செய்துவிட
மக்களாயம்(சமூகம்) தான்
ஊசிக் கண்ணால உற்று நோக்குதே...
சரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)
ஏதாச்சும் செய்யலாம் தான்
தவறு செய்யத் தெரிந்தாலும்
பிடிபடாமல் இருக்கத் தெரியாதே!
எனக்கும் விருப்பம் தான்
தலைவனாகத் தான்
ஆனால்,
முன்னுக்குப் போய்
முகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்
இன்னும்
தொண்டனாகவே இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
நாட்டை ஆளத்தான்
நான் ஆட்சிக்கு வந்தால்
எல்லோருக்கும்
சம உரிமை கிடத்தாலும் என்றே
முதலாளிகள் எதிர்ப்பதால் தான்
ஊருக்குள்ளே,
வீட்டிற்குள்ளே,
வீட்டு மூலைக்குள்ளே
முடங்கி இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
வானில் உலாவும் பகலவனைப் போல
உலகை ஆளத்தான்
நான் உலகை ஆண்டால்
எல்லா நாடுகளும்
சம வளம் பெற நேர்ந்தால்
தங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே
தாய் நாட்டில்
எனக்கு
வீட்டுக்காவல் போட நினைப்பது
வல்லரசுகள் ஆயிற்றே!
எனக்கும் விருப்பம் தான்
சூழவுள்ள மக்களுக்கு
நல்லது செய்யத் தான்
ஆனால்,
சுவாமி விவேகானந்தர் சொன்னார்
"உன்னைத் திருத்திக் கொள்
சூழவுள்ள மக்கள்
தாமாகவே திருந்துவார்கள்" என்றே
என்றாலும்
என்னைத் திருத்தப் பார்க்கிறேன்
இன்னும் முடியவில்லையே!
எல்லோருக்கும் விருப்பம் தான்
எல்லாமும் செய்யத் தான்
என்றாலும் பாருங்கோ
சாட்டுகளைப் பொறுக்கி
சறுக்கப் பல ஆளுங்க...
உயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே
எல்லாமும் செய்திட
முன்னிற்பவர் சில ஆளுங்க...
இப்படித் தான்
நம்மாளுங்க இருந்தால்
எப்படித் தான்
நம்ம வீடும் நாடும் உலகும்
மேம்பட்டு அமைதிக்குத் திரும்பும்...
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
சுவாமி விவேகானந்தர் சொன்னார்
பதிலளிநீக்கு"உன்னைத் திருத்திக் கொள்
சூழவுள்ள மக்கள்
தாமாகவே திருந்துவார்கள்" //
இதைத்தான் அப்துல்கலாம் ஐயாவும் சொல்லி வருகிறார். சமுதாயத்தை அது உனக்கு என்ன செய்தது என்று கேட்கும் முன் நீ என்ன செய்தாய் அதற்கு என்று சிந்தித்துப் பார்.
நல்ல கவிதை ஐயா!
தங்கள் வழிகாட்டலை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தங்கள் வழிகாட்டலை ஏற்றுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.