தேர்வுத் தாளோடு ஐயாயிரம் உரூபா
மட்டுமல்ல
மடல் ஒன்றும் இணைக்கப்பட்டதாகவும்
தேர்வுத்தாள் திருத்துபவர்
சொன்னதாகச் செய்தி சொல்லப்பட்டது.
காதுக்கு எட்டிய செய்தியைக் கேட்டதும்
என் உள்ளத்தில்
எத்தனையோ எண்ணங்கள் தோன்றிச்சு...
ஐயாயிரம் உரூபா
எத்தனையோ கைகளுக்குள் அகப்படாமல்
தேர்வுத்தாள் திருத்துபவர் கைக்கு
பாதுகாப்பாகப் போய்ச் சேரும் வண்ணம்
தேர்வுத் தாளைக் கட்டிக் கொடுத்த
மாணவரைப் பாராட்டவா...
ஐயாயிரம் உரூபாவைத் தனதாக்காமல்
எல்லோருக்கும் வெளியிட்ட
தேர்வுத்தாள் திருத்துபவரைப் பாராட்டவா...
வானொலியில் செய்தி வாசிக்கையில்
மடலில் என்ன எழுதப்பட்டது என்பதைக்கூட
கேட்க மறந்து சிரித்துக் கொண்டிருந்த
என்னைப் பாராட்டவா...
எல்லோரையும்
ஒருகணம் சிந்திக்க வைத்த
மாணவரின் செயலைப் பாராட்டவா...
பணம் கொடுத்தால் மட்டுமல்ல
மாணவிகளின்
கன்னித் தன்மையையும் வழங்கினால்
சித்தியடையச் செய்வோர் இருப்பதை
கடவுளுக்குத் தெரிவித்த
இச்செய்தியைப் பாராட்டவா...
குறுக்குவழியில் சித்தியடைய முயலும்
மாணவர்களுக்கு
வழிகாட்டுவோரைப் பாராட்டவா...
குறுக்குவழியில் சித்தியடைய
எண்ணும் வண்ணம்
மாணவர்களுக்கு
மூளையைக் கொடுத்த ஆண்டவா
பதில் கூறு என்று கேட்கவா...
இச்செய்தியைக் கேட்ட ஆண்டவனே
ஆடிப்போய் விழுந்தவன் தான்
இன்னும் எழவேயில்லையா...
பணிவாக உங்களிடம்
கேட்பது என்னவென்றால்
ஆண்டவனைத் தட்டி எழுப்பாதீர்
இதைவிட இன்னும் எத்தனையோ
இவ்வுலகில் இடம்பெறுகிறதே
அவற்றை எல்லாம் கேட்டு
ஆண்டவனுக்கு மூச்சுப் போனால்
நாம் எப்படி வாழ்வது?
குறிப்பு: கையூட்டு (இலஞ்சம்) வழங்கும் செயலில் "இப்படியொரு நுட்பமா?" என வானொலிச் செய்தி கேட்டதும் எழுதினேன்.
வணக்கம்
பதிலளிநீக்குமுதலில் தங்களின் கவியே படித்தேன்.
உண்மையில் வேதனையான விடயம்
அரசன் அன்றுகொள்வான் தொய்வம் நின்றுகொள்ளும் என்பதுக்கு இனங்க இப்டி செய்பவர்களுக்கு 24 மணித்தியாலயத்தில் ஆண்டவன் நண்மை தீமையை காட்டுவர். இப்பத்தைய சூழ்நிலைக்கு.
கவிதைப்பகிர்வுக்கு நன்றி.
த.ம1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வருத்தப்பட வைக்கிறது ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ம்ம்ம் மிகவும் வருத்தமான செய்தி அதுவும் கல்வித் துறையில்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
மருத்துவப் படிப்பில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், ஒரே ஒரு மதிப்பெண் கூட்டுவதற்கே சில லட்சங்கள் தரப்படுகிறதாமே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இவர்கள் எல்லாம் படித்து உருப்படவாப் போகிறார்கள் ?
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வேதனைக்குறிய பதிவு...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
எங்கே போகிறது உலகம்...? ம் .. சோகமான இருக்கிறது.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஐயாயிரம் உரூபா...
பதிலளிநீக்குஐயோ...என நினைக்க வைக்கிறது. ஐயா.
நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.