Translate Tamil to any languages.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!


பாபுனையும் ஆற்றல்
எல்லோருக்கும் இருக்கத் தான் செய்கிறது...
பாபுனையும் ஆற்றலை
வெளிக்கொணர முயற்சி எடுத்தவர்களே
பாவலராக/ கவிஞராக மின்னுகின்றனர்!
நீங்களும்
பாவலராக/ கவிஞராக மின்ன
பாபுனையை விரும்புங்கள்...
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
பாபுனைதலும்
எழுதி எழுதிப் பழகலாம் என்றே
பாபுனையை விரும்புங்கள்!
பாபுனையை விரும்பினால் போதும்
பாபுனையும் ஆற்றலே வந்துவிடும்...
பாபுனையும் ஆற்றல் இருப்பின்
இன்றைக்கே போட்டிக்கு வந்துவிடும்...
நாளைக்கே வெற்றி பெறலாம்
நாளையன்று
பாவலராக/ கவிஞராக மின்னலாம்!
நிற்க
கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கிய பின்
நன்றே படித்த பின் இறங்கலாமே!!
அறிமுகப் பதிவுகள்
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!
http://wp.me/pTOfc-b1
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
2014 தீபாவளிக் கவிதைப் போட்டி பற்றியறிய
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html


13 கருத்துகள் :

  1. போட்டியாளர்களுக்கும் போட்டியை நடத்தும் உங்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பாபுனைய என்னாலும் முடியுமோ ? முயற்சிக்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாபுனைய முடியுமென எண்ணி விட்டால்
      காற்றே சிறகாய் வந்து முளைக்கும்
      கற்பனை வானில் நீங்களும் பறக்கலாம்
      கவிதைகள் தானாகவே வந்து இறங்கும்
      போட்டியில் பங்கெடுத்தால் வெற்றியே!

      நீக்கு
  4. விரும்பினால் ஆற்றல் வெளிவரும் - உண்மைதான் ஐயா..
    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. நான் ப்போட்டியில் குதித்துவிட்டேன். கரை சேர்வனோ..அல்லது ஆத்தோடு போவதோ...முடிவு கண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கவிதைப் போட்டியில் குதித்து விட்டேன் என்பதை விட எனக்குத் தான் முதற் பரிசு என எண்ணிக் குதியுங்கள். அப்ப தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

      நீக்கு

  6. வணக்கம்!

    கவிதைப் பெருக்குக் கடலெனப் பொங்கிப்
    புவியைப் புரட்டும் புகுந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!