Translate Tamil to any languages. |
திங்கள், 25 ஆகஸ்ட், 2014
மக்களாயமே எனது பல்கலைக்கழகம்
"சமூகம்" என்பது வடசொல் - அதன்
தமிழ் வடிவம்
"மக்களாயம்" என்றே பொருள்படும்!
நான் என்றால்
மக்களாயத்தில் ஓர் உறுப்பினரே!
அதனால் தான் - என்னை
"மக்களாயத்தில் தங்கியிருக்கிறேன்" என்று
உங்களால் கூற முடிகிறதே!
நாம்
முழு நிறைவோடு(சுதந்திரமாக) வாழ
மக்களாயம் உடன்படாது என்பது
முற்றிலும் பொய்யே!
நம்மாளுகளின் ஒழுக்கத்தைப் பேண
வேலியாக நின்று
காவல் செய்வது மக்களாயமே!
என்னை
எடுத்துக் கொண்டால் பாரும்...
வெற்றிலை, பாக்குப் போட்டாலென்ன
புகையிலை, சுருட்டு பற்றினாலென்ன
அழகி ஒருத்தி பின்னே சுற்றினாலென்ன
அற்ககோல்(மது) குடித்தாலென்ன
விடுதியில் கன்னியோடு களிப்புற்றாலென்ன
சிவப்பியிருக்க கறுப்பியோடு காதலித்தாலென்ன
கடைத் தெருவில் களவெடுத்தாலென்ன
பணித்தளத்தில் கையூட்டுப் பெற்றாலென்ன
எண்ணிப் பார்த்தால் - நான்
பண்ணிய கெட்டது எல்லாவற்றையுமே
நாடறியச் செய்வதும் மக்களாயமே!
பால் கடைக்கு முன்னே
பனம் கள்ளுக் குடித்ததைக் கூட
பள்ளிக்கூட ஆசிரியருக்குப் போட்டுடைத்து
பிரப்பந் தடியால அடிவேண்டித் தந்ததும்
மக்களாயமே என்றால்
மக்களாயத்தின் கண்காணிப்பு
எவ்வளவு வலுவானது என்பதை
நீங்கள் அறிவீர்கள் தானே!
நம்மூர்
மக்களாயத்திடம் சிக்காமல் தப்ப
வெளியூர் போய்
கெட்டது செய்து சிக்கியோரும்
இருக்கிறார்கள் என்றால்
ஊருக்கூர் மக்களாயம்
பலவூரை இணைத்த வலையாக இருப்பதை
எவரும் ஏற்கத்தானே வேண்டும்!
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகள் பேசிக்கொள்வதை
"நாட்டு நடப்புப் பறையினம்" என்று
நாம் இருப்போம்
ஆனால்,
அங்கே அவர்கள் பறையிறதை
காது கொடுத்துக் கேட்டால் தெரியும்
"அவள் அவனோடு ஓடிப் போயிட்டாள்"
"அவளை அவன் தூக்கிட்டுப் போயிட்டான்"
"வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தவளாச்சே"
என்றெல்லாம்
ஆளாலைப் பற்றி அலசுவரே!
இப்படித்தான் பாருங்கோ
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகளால் தான்
செய்தி வேகமாகப் பரவுகிறது என்றால்
மக்களாய வலையமைப்பின் பலம்
என்னவென்று நான் பாடுவேன்!
கெட்டதைச் சுட்டும் மக்களாயம்
குறித்த கெட்டது நிகழாமல்
வழிகாட்டலையும் மதியுரையையும்
வழங்கத் தவறுவதில்லை என்பதை
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் குழுவில் நானுமிருந்தே
நாலும் கற்றறிந்தேன்!
பட்டப் படிப்பு படிக்காத
நான் கூட
கொஞ்சம் கொஞ்சம் படித்ததை
அறிமுகம் செய்த மக்களாயம்
என்னில் பிழை பிடித்தாலும்
சரிப்படுத்தப் புகட்டிய அறிவே
என்னை அறிஞனாக்கியது என்றால்
மக்களாயமே
எனது பல்கலைக்கழகம் என்பேன்!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
இந்த பல்கலைக் கழக செனட்டர் என்று என்னை நானே பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் !
பதிலளிநீக்குஅப்படியே ஆகட்டும், குரு!
நீக்குஆனால்,
தங்கள் தளமூடாக - நாம்
கற்றுக்கொள்கிறோம்...
கண்டிப்பாக மக்களாயம் ஒரு பல்கலைக் கழகமே! அதிலிருந்து கிடைக்கும் பல அனுபவங்கள் தானே நம்மை வாழ்வில் வழி நடத்திச் செல்லுகின்றது?!!! நல்ல பதிவு நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
புதிய விசயங்கள் கிடைத்தது எமக்கு, நன்றி நண்பரே...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.