Translate Tamil to any languages.

சனி, 2 ஆகஸ்ட், 2014

தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!

உலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம் வலைப்பதிவர்களும் உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணக் களமிறங்கியவர்களே! உண்மையில் இத்தனை ஆயிரம் வலைப்பதிவர்களையும் உங்கள் யாழ்பாவாணன் போருக்கு அழைக்கின்றார்.

ரூபனின் வலைப்பூவில் "தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 (http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html) " என்ற தலைப்பில் வெளியான பதிவை எல்லோரும் படித்திருப்பீர்கள். சிறந்த போட்டி நுட்பம் அதாவது சிறந்த பாவலரை/கவிஞரை அடையாளப்படுத்தும் போட்டி, மிகப் பெரும் புலமை மிக்க நடுவர்கள், பலமுறை போட்டிகள்      நடாத்தி பட்டறிவு (அனுபவம்) பெற்ற ரூபன் குழுவினர் நடாத்துகின்றனர். இந்நிலையில் உங்கள் யாழ்பாவாணன் போருக்கு அழைப்பதில் தவறேதும் உண்டோ?!

என்னத்தைப் பண்ணிக் கிழிக்கலாமென்று
போரென்றால் போரென்று
யாழ்பாவாணன் அழைக்கின்றாரென்று
நீங்கள் கேட்கலாம்.
நானே சொல்லிவிடுகின்றேன்.

போட்டிகள் என்பது - சிறந்த
காட்டிகள் என்பேன் - அந்த
புலமைசாலிகள் யாரென்று
காட்டி நிற்கும் செயலே
போட்டிகள் என்பேன்!

வாருங்கள்... போராடுங்கள்...
உங்கள்
தமிழறிவை வெளிப்படுத்தி
பாப்புனையும் ஆற்றலை
முன்வைத்து வெளியிடுங்களேன்!

போரென்று முழங்கி
போட்டியில் பங்கெடு என்பதா?
போட்டியில் பங்கெடுத்தாலே
போர் தொடங்கியாச்சே!
ஆனால்,
வலுவான போரில்லையே!

ரூபன் குழுவினர் நடாத்தும் போட்டி என்றால் எல்லோரும் பங்கெடுப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை. இப்பதிவின் தொடக்கத்தில் சுட்டிய பன்னீராயிரம் வலைப்பதிவர்களும் இப்போட்டியில் பங்கெடுத்தால் போரென்றால் போர் தான்! கீழ்வரும் இணைப்புகளை உங்கள் வலைப்பூக்களிலும் இணைத்து தீபாவளி (2014) நாளில் மாபெரும் அந்தக் கவிதைப் போரை ஏற்படுத்த எல்லோரும் ஒன்றிணைவோம்.

உங்கள் வலைப்பூக்களில் பக்கப்பட்டையில் (Sidebar) இணைக்கக் கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்துக.



<a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html" target="_blank" title="
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014">
<
img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNjWRQKdnumTvlr12wUtsgB5Zezx4sGbsYx_SvDhD8RKM-z_ghJZLPpQJE5fbkQEn3YdWWg98oYSODUWDfjHMtPP6ftxsukbMH_x9__eEqz_Z9c8PgiWFnMp1P9QvVJd7RV_IaPEicDKS/s1600/Untitled-1+copy.jpg" height="160" width="200">
</a>

உங்கள் வலைப்பூக்களில் பதிவுப்பகுதியில் (Posting) அறிமுகம் செய்ய கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்துக.



<a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html" target="_blank" title="
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014">
<
img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNjWRQKdnumTvlr12wUtsgB5Zezx4sGbsYx_SvDhD8RKM-z_ghJZLPpQJE5fbkQEn3YdWWg98oYSODUWDfjHMtPP6ftxsukbMH_x9__eEqz_Z9c8PgiWFnMp1P9QvVJd7RV_IaPEicDKS/s1600/Untitled-1+copy.jpg" height="400" width="480">
</a>

எல்லோரும் போட்டியில் பங்கெடுப்போம். பல்லாயிரம் வலைப்பதிவர்களைப் போட்டியில் பங்கெடுக்கச் செய்து; தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போரை ஏற்படுத்த முன்வாருங்கள்!


18 கருத்துகள் :

  1. வணக்கம்
    அண்ணா.

    தங்களின் பக்கம் பதிவை பதிவாக வெளியிட்டமைக்கு நன்றிகள் பல.. அனைத்து தமிழ்பதிவர்களும் திரண்டுவந்து தங்களின் கவிதைகளை படையுங்கள்... பரிசுகளையும் பதக்கங்களையும் அள்ளிச்செல்லுங்கள்.த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லாயிரம் வலைப்பதிவர்களைப் போட்டியில் பங்கெடுக்கச் செய்வதே எமது பணியாகும்.

      நீக்கு
  2. அழைப்பாளிகளுக்கு நன்றியும், பற்கேற்''போர்''களுக்கு வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்மிக்க நன்றி.”

      நீக்கு
  3. இந்த போரில் வெற்றிவாகை சூடப்போவது யார் ?காணக் காத்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. போரில் வேடிக்கை பார்க்க வரலாங்கலா.......சாமீ.........

    பதிலளிநீக்கு
  5. போட்டி நடத்தும் தங்களுக்கும், போட்டியாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் சிறப்பாக நடந்தேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. போட்டியாளர்களுக்கும் போட்டியை நடத்தும் உங்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. கவிதைத்தலைப்பு போட்டி விதிமுறைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி என்பவற்றை எமது இலக்கியக்குவிய முகப்புத்தகத்தில் நேரடியாக பதிவிடுங்கள். (இணைப்பு கொடுக்காமல்) இது தொடர்பாக பேசலாம். அழையுங்கள்.0776284687-- தாஸ்.

    பதிலளிநீக்கு
  10. போட்டி முடிவுகள் வந்திருந்தால்,
    வெற்றிபெற்ற கவிதைகளைப் படிக்க விழைகிறேன்.
    அன்பு கூர்ந்து தெரிவியுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டி முடிவுகள் விரைவில் வெளிவரும்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!