Translate Tamil to any languages.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

காதலி, காதலன் நினைவாக...

முதலாம் சந்திப்பு:-
ஆண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?

பெண் : நான் என்ன செய்ய முடியும். எனது நீண்ட தலைமுடியைப் பொருட்படுத்தாமல், மொட்டை அடித்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.

இரண்டாம் சந்திப்பு:-
பெண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?

ஆண் : பெட்டை மூஞ்சியாகக் கிடந்த என் முகத்தில் நீளும் மீசை தாடியை வளர்த்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.

மூன்றாம் சந்திப்பு:-
நானே ஒரு பெரியவரிடம் : காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?

பெரியவர் : இன்றைய பிஞ்சுகள்; ஒன்றை விட்டால் இன்னொன்றைப் பார்க்குதுகள்; உதுகள் எங்கே தாஜ்மகாலைப் போல காதலன், காதலி நினைவாக எதையாவது கட்டுங்கள் என நம்புகிறது.

நான்காம் சந்திப்பு:-
"காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?" என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

நகைச்சுவையாக உங்கள் பதிலைத் தாருங்களேன்.

நான் பார்க்குமிடமெங்கும் உண்மைக் காதலைக் காணவில்லை. ஆகையால், இப்படியான கேள்வி அம்புகளை நீட்டுகிறேன்.

12 கருத்துகள் :

  1. காதலின் நினைவாய் தாஜ் மகால் கட்ட முடியா விட்டாலும் ,காதலிக்கு தங்கை இருந்தால் கட்டிக் கொள்வார்கள் என கேள்வி பட்டிருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    காதலிக்கும் போது நகமும் தசையுமாக இருப்பார்கள்
    பின்பு. தங்கமும் மண்போல இருப்பார்கள் (இரண்டையும் ஒட்டமுடியாது.)
    இதுதான் இன்றைய நிலை ..நன்றாக உரையாடியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. காதல் எப்போது வரும் என்று தெரியாது என கேள்விப்பட்டு இருக்கிறேன்
    காதல் எப்போது போகும் என்று தெரிகிறது. என இப்போது பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய நிலை..
    எங்கிருந்தாலும் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பணம் இருந்தால் ஒரே கொடியில் பற்றிப்பரவும். பணம் இல்லையென்றால்...காதல் கொடிக்கு கொடி தாவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!