Translate Tamil to any languages. |
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?
உறவுகளே! முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள். அடுத்து எனது பதிவைப் படிக்கத் தொடருங்கள்.
http://sivamgss.blogspot.com/2014/08/blog-post_69.html
என்னைப் பெத்தவளுக்குத் தான் தெரியும்
என்னை ஈன்ற போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
பாப் புனைந்தவருக்குத் தான் தெரியும்
பாப் புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
கதை புனைந்தவருக்குத் தான் தெரியும்
கதை புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
நடிகை, நடிகருக்குத் தான் தெரியும்
நடித்து முடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
சிற்பிக்குத் தான் தெரியும்
சிலையை வடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
மொத்தத்தில எண்ணிப் பார்த்தால்
பிள்ளையை ஈன்ற தாய் - தான்
பட்ட துன்ப துயரங்களைப் போல தான்
படைப்பொன்றை ஆக்கி முடிக்கையிலே
படைப்பாளி ஒருவரும்
பட்டிருப்பார் என்பதைக் கூட
படியெடுப்போர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே!
"சின்ன வீடு தந்த சுகமிருக்கே - அது
காவற்றுறை தந்த கம்படியில
காணாமல் போயிட்டுதே!" என்று
எழுதியிருக்கிறியே
சின்ன வீட்டை நாடி
காவற்றுறையில சிக்கினதை எழுதினால்
உன்னை எவர் மதிப்பாரென
நண்பர் ஒருவர் கேட்க - அது
யாழ்பாவாணன் எழுதியது - நானோ
படியெடுத்துப் பகிர்ந்தேன் என்று
படியெடுத்தவர் பகிரும் போது தான்
பதிவின் உண்மைத் தன்மை அறியாதவர்
எல்லோரும் இப்படித்தான் சிக்குவாரென
அறிய முடிகிறதே! - நான்
கட்டிய மனைவியின் சுகத்தை விட
சின்ன வீட்டின் சுகம் கேடென எழுதியதை
வெளிப்படுத்த முடியாதமையால்
படியெடுத்தவர் சிக்கினார் என்பதைச் சொன்னேன்!
படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?
படியெடுத்துப் பகிர்ந்ததை விளக்க முடியாமலா?
இதழியல், ஊடகவியல் பற்றி
எள்ளளவு தெரிந்ததை வைத்துச் சொல்கிறேன்
படியெடுத்துப் பகிர்வதற்குச் சட்டமில்லை
குற்றம் என்று உரைக்கின்றேன்...
எவருடையதெனச் சான்றுப்படுத்தி
எதற்காகப் பகிருவதாகச் சுட்டி
படியெடுத்துப் பகிரலாம் என்பதையும்
எல்லோரும் ஏற்பீர்களென
நானும் நம்புகின்றேன்!
லேபிள்கள்:
7-ஊடகங்களும் வெளியீடுகளும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
மிக்க நன்றி. அருமையான கவிதை.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகவிதை எழுத தாங்கள் பட்ட துன்பங்களும் புரிகிறது.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பதிவை திருடி புத்தகம் வேறு போட்டுள்ளார்களா,அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாமே ?
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிட்டு ஓடிப்போன கதைதான்.. படியெடுப்பவர்கள் உதவி,நன்றி என்றாவது போடவேண்டும். அந்த நாகரிகம்கூட தெரியாதவர்களை என்னவென்று சொல்வது...............திருட்டு பேர்வழி, அடுத்தவன் சொத்துக்கும் பொண்டாட்டிக்கும் ஆசைப்படும் காமாந்தக பேர்வழின்னுதான்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இவர்கள் தானாகத் திருந்த வேண்டும்! இல்லையேல் இவர்களின் சுயரூபத்தை அடிக்கடி நாம் வெளிப்படுத்த வேண்டும்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்!
கலைத்திருட்டுப் போன்று வலைத்திருட்டுச் செய்யும்
அலையிருட்டுக் கொண்ட அகம்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.