2014 ஐப்பசி 07 இல் எனக்கு நாற்பத்தாறாம் பிறந்த நாள். எல்லோருக்கும் இப்படிப் பிறந்த நாள் வருமே! இந்நாளில் ஆளுக்கு ஒவ்வொரு சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். உங்கள் பிறந்த நாளன்றும் நீங்கள் எதைத் தொடருவதாகவோ எதைக் கைவிடுவதாகவோ எண்ணியுள்ளீர்கள். உங்கள் பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்னவென்பதை வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!
1. எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென (தன்னம்பிக்கையுடன்) முயற்சியில் இறங்குதல்.
2. பகையைத் தோற்றுவிக்காமல் நல்லுறவைப் (குடும்பம், நட்பு) பேணுதல்.
3. செலவைக் குறைத்து வரவைப் பெருக்குதல். சேமிப்புப் பழக்கத்தைக் (குடும்பம் மேம்பட) கடைப்பிடித்தல்.
4. பிறமொழிக் கலப்பின்றித் (தாய் மொழி மேம்பட) தமிழைப் பேசி வழக்கப்படுத்துதல்.
5. புகைத்தல், மது(குடித்தல்), விலை மகளை நாடுதல் போன்ற கெட்ட பழக்கமுள்ளோரைச் (தாய்நாடு மேம்பட) சீர் திருத்துதல்.
6. எமக்கு மேலதிகமாகவுள்ளதை (தனக்குப் பின் தானம்) ஏழைகளுக்கு வழங்கி உதவுதல். எமக்கு வாழ்வளிக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றியாக இதனைப் பின்பற்றலாம்.
7. மூன்று நேரமும் மூக்குமுட்ட விழுங்கிப் போட்டு நீட்டி நிமிர்ந்து படுப்பதும் விடிய எழுந்தால் எனது வருவாயை மட்டும் கவனிப்பது (சுயநலமாக...).
8. எந்தவொரு சிறப்புத் திட்டங்களும் (Master Plans) எனக்கில்லை (முட்டாளாக...).
என் பிறந்த நாளில் இப்படிச் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு
செயலில் இறங்கி நல்ல மனிதராகலாம் என எண்ணினேன்.
தங்கள் பிறந்த நாளிலும் எத்தனையோ சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டுப் புதிய அகவையில் நல்ல மனிதராக எண்ணியிருப்பியள். அவற்றைப் பாருங்கோ நம்ம வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
தங்களின் பிறந்த நாள் காண இன்னும் 2மாதங்கள் உள்ளது. முற்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்துப்பதிவு ஒளிர்கிறது
பிறந்த நாளில் தாங்கள் வகுத்த திட்டங்கள் நன்றாக உள்ளது. பிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நானும் யோசிக்கிறேன் நண்பரே....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
யோசிக்க வேண்டும் நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.