Translate Tamil to any languages.

புதன், 6 ஆகஸ்ட், 2014

தாஜ்மகாலைப் பற்றிப் படித்ததில்...

http://wp.me/pTOfc-b1
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!


காதல் நினைவுப் பரிசாக
இளவரசி மும்தாஜ்ஜிற்காக
மன்னன் சாஜகான் கட்டிய
தாஜ்மகாலிற்குப் பின்னேயுள்ள
துயரம் நிறைந்த கதைகளை
உள்ளத்தில் மீட்டுப் பார்த்தால்
ஜமுனை நதி போல
எங்கள் கண்ணீரல்லவா ஓடும்!
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பிக்குப் பாராட்டு விழா நிகழ்வாம்...
ஊரே திரண்டு எழுந்து வர...
இசை முழக்கம் வானைப் பிளக்க...
வரவழைக்கப்பட்ட சிற்பி
மன்னன் சாஜகானைக் கைகூப்பி வணங்க...
மன்னன் சாஜகானோ
தன் உடைவாளைக் கழட்டினான்...
ஓங்கியே ஒரு வெட்டுப் போட்டான்...
கூப்பிய சிற்பியின் இரு கைகளும்
துண்டாகக் கீழே விழுந்தன...
வானதிரக் குளறிய வண்ணம்
நிலத்தில் விழுந்து
புரண்டு உருண்ட சிற்பியை
"வெளியே அழைத்துச் செல்" என
பணியாள்களுக்குக் கட்டளையுமிட்டான்...
இதற்கு மேலேயும்
"தாஜ்மகாலைப் போல
இன்னொன்று முளைக்கக் கூடாது" என்றே
சிற்பியின் கைகளை வெட்டியதாகவும்
சாஜகான் உரைத்தும் உள்ளானே!
இந்தத் துன்பச் செய்தியை
யாழ் வலம்புரிப் பத்திரிகையில் படித்ததும்
எனக்கு வெறுப்புத் தான் வந்ததே!
இளவரசி மும்தாஜைப் பிரிந்த
மன்னன் சாஜகான் மும்தாஜிற்காக
தன் காதல் பரிசாக
"உலகை ஈர்க்கும் வண்ணம்
புனித நினைவிடத்தை வரைந்து தா" என
பணியாளன் ஒருவரிடம் பணித்தானாம்!
ஏதுமறியாப் பணியாளன்
அரச கட்டளைக்குப் பணிந்தே
படம் வரையும் பணியில் இறங்க
துணைக்கொரு தோழியையும் நாடினான்!
படம்வரை கலைஞனுக்குத் தோழியும் உதவ
இருவரும் மாத விடுமுறையில்
ஜமுனை நோக்கியே நடைபோட்டனர்...
காதல் நினைவகம் வரைய - காதலில்
தோற்றவனாலேயே முடியுமென உணர்ந்தே
பணியாளனின் தோழி
பணியாளன் மீது காதல் கொண்டாளே...
இன்பமாகக் காதல் செய்தே
இருவரும் காலம் கடத்த
வரைபடம் கொடுக்க வேண்டிய
நாளும் நெருங்கி வரவே
பணியாளனின் தோழி ஜமுனையில் விழுந்து
காதல் மூச்சை நிறுத்திக் கொண்டாளே!
"உதவி செய்யத் துணைக்கு வந்தவள்
உள்ளத்தை அன்பாலே தடவியவள்
ஜமுனைக்கு உணவானாளே" என
படம்வரை பணியாளன் துயருற - அவன்
துயர் யாரறிவார் - அதுவே
நிழல் கூட விழுந்திடாத
சலவைக் கல்லால் ஆன
தாஜ்மகால் வரைந்திடத் துணையாயிற்றாமே!
தன்னை நினைத்து வடிக்கும் வரைபடம்
நன்றாக அமையுமென்றே
விழுந்தவளின் துயரைச் சுமப்பதாலேயே
சிரித்துக் கொண்டே ஓடும்
இந்திய நதிகளிலே ஜமுனை மட்டும்
அழுது கொண்டே ஓடுகிறதாம்!
இந்தத் துயரச் செய்தியை
பாவலர் பழனிபாரதியின் நூலொன்றிலும்
பழனிபாரதி எழுதியதாகப் பத்திரிகையிலும்
படித்ததும் - எனக்கு
வெறுப்புத் தான் வந்ததே!
முதலாம் துன்பச் செய்தியும்
இரண்டாம் துயரச் செய்தியும்
மூன்றாம் ஆளாகிய
என் உள்ளத்தைக் குத்தியதாலே
படித்ததும் - எனக்கு
வெறுப்புத் தான் வந்ததே!
காதலின் நினைவிடமான
தாஜ்மகாலுக்கு;
இரு காதல் இணைகளா?
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பியின் இரு கைகளா?
ஒரு தாஜ்மகாலுக்குப் பின்னாலே
இன்னும் எத்தனை
துன்ப, துயரச் செய்திகள் இருக்குமோ
நானறியேன் நண்பர்களே!
--------------------------------------------------------------------
நண்பர்களே! உங்களுக்குத் தெரிந்த தாஜ்மகாலுக்குப் பின்னாலே உள்ள துன்ப, துயரக் கதைகளை பாடல்களாகவோ கவிதைகளாகவோ கதைகளாகவோ புனைந்து இப்பகுதியில் எடுத்துக் கூற முன்வாருங்களேன்.

6 கருத்துகள் :

  1. ஓவ்வொரு வரலாற்றுக்குப் பின்னும் ஓவ்வொரு விதமான துயர சம்பவங்கள் இருக்கின்றன. அது தெரியாத வரை அழகு, தெரியும் போது அதன் ஊடே நம் கண்கள் அவர்களையும் நோக்குகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. நண்பருக்கு இந்த ''கை'' வெட்டியது உண்மைதானா ? தயவு செய்து தவறாக கருதவேண்டாம் இது பொய் என்ற செய்தியையும் நான் படித்திருக்கிறேன் இதைப்படித்தவுடன் இனி இதனைப்பற்றி தேடவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி விட்டது... இது உண்மையானால் ? எனக்கு ஷாஜஹான் மீது வெறுப்பே உண்டாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாழ் வலம்புரிப் பத்திரிகையில் படித்த உண்மைச் செய்தி.
      பத்திரிகை தவறு விட்டிருக்கலாம்.
      எனது பதிவில் தவறில்லை!

      நீக்கு
  3. எனக்கென்னவோ இவையெல்லாம் மிகைப் படுத்தி கூறப் பட்டதாகவே படுகிறது !

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!