Translate Tamil to any languages.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்


வருவார் போவார் பழகுவார் பிரிவார்
நம்மவர் பிறவிச் செயலே!
தருவார் கேட்பார் கொடுப்பார் பெறுவார்
நம்மவர் செயலில் பாரும்!
சேருவார் விலகுவார் தேடுவார் மறைவார்
நம்மவர் தேவைகளில் தெரியும்!
சொல்வார் செய்யார் கைகுலுக்குவார் தோள்கொடுக்கார்
நம்மவர் ஒற்றுமையில் புரியும்!
அழுவார் வெறுப்பார் துடிப்பார் துன்புறுவார்
நம்மவர் வினைப்பயன் அறுவடையிலே!
புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்
"உதவி செய் பலனை எதிர்பார்க்காதே" என்பது
இறைவன் ஏட்டினிலே...
"உதவி செய்திருந்தால் பலன் கிட்டும்" என்பது
மனிதன் வீட்டினிலே...
செயலில் தேவைகளில் ஒற்றுமையில் முடிவுகளில்
சுயநலம் விட்டுப் பொதுநலம் நோக்கின்
எம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!

10 கருத்துகள் :

  1. வணக்கம்
    அண்ணா.
    சபாஷ் சரியாக சொன்னீர்கள் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த..ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான வார்த்தைகள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வருவார் போவார் பழகுவார் பிரிவார்
    நம்மவர் பிறவிச் செயலே!------உண்மை நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!