மணமுடித்ததும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே காதல் மலர வேண்டும். மணமான ஆண்துணை, பெண்துணை இருவரும் காதல் கொள்வதாலேயே உளவியல், பாலியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடிகிறது.
மணமாகாத இருவர் காதல் கொள்வதாலே மணமுடிக்க முன் பழகியதாலே மணமுடித்த பின் மணவாழ்வில் சிக்கல் வராது என்பது பொய். ஏனெனில் அன்பு அதிகமானதால் வந்த காதல், மணமுடித்த பின் இருக்க வேண்டிய தேவைகளை அறிந்திருக்காது.
மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்தவர்களிடையே "இதற்காகவா காதலித்தாய்?" எனச் சில சூழலில் மோதல் வரலாம். ஆனால், மணமுடித்த பின் காதலிப்பவர்களிடயே நல்ல குடும்பமாக இருப்பதற்கு எல்லாம் தேவை என மோதிக்கொள்ள வாய்ப்பில்லை.
ஆயினும், நான் கூறும் கருத்தையே பொய்யாக்கும் வண்ணம் மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்த பின் மகிழ்வோடு சிலர் வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டாகத் தொழில் நிறுவனமொன்றில் நல்ல நட்போடு ஐந்தாண்டுகளாகப் பழகிய இருவரிடையே, இருவரும் மணமுடித்தால் நல்லாயிருப்பியள் என மாற்றார் தூண்டுதலினால் காதலித்து இன்றும் மகிழ்வோடு வாழ்கிறார்கள். அவர்களிடயே மலர்ந்த காதலில் "மணமுடித்த பின் இவ்வாறு வாழலாம்" என்ற குறிக்கோள் இருந்திருக்கிறது.
முடிவாகச் சொல்வதானால் காதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அன்பு அதிகமானதால் வந்த உணர்ச்சியால் தோன்றியது. மற்றையது நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட இரு உள்ளங்களில் தோன்றிய காதல்.
முதலாம் காதல் இலக்கற்றது, இலக்குக்குறித்தது இரண்ணடாவது காதல். காதலில் எந்த வகை நல்லதோ, அது மணவாழ்வை முறிக்காது.
பள்ளிக் காதல் படலை வரையும் அகவைக்கு(21 வயதுக்குப் பிந்திய) வந்த பின் பொறுப்புணர்ந்தவர் புரிந்த காதல் ஆயுள் வரை தொடருமே!
காதல் பற்றிய மேலதீகத் தகவலுக்கு:
உளவியல் நோக்கில் காதல்
காதலைப்பற்றி அருமையாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
காதல் உண்மையான அன்புடன், நேசத்துடன் இருந்தால் அது கல்யாணம் முடித்த பின்னும் அதிகமாகி நல்ல இல்லறம் நடத்த வழி கோலும். காதல் உண்மையாக நேர்மையுடன் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.