Translate Tamil to any languages.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தைப்பொங்கல் 2010

பொங்கலோ பொங்கல்...
கதிரவன் முகம் பார்த்து
வேளான்மை விளைச்சல்
பெற்றெடுத்த உழவர்கள்
பொங்கும் பொங்கல்!
பால் வடியும்
பானை முகம் பார்த்து
பொங்குவோர் எண்ணுவது
இம்முறை எப்பக்கம்
விளைச்சல் பெருகும் என்பதையே!
தை பிறந்தால் வழி பிறக்குமென
எம்மவர்
பொங்கல் பானை கீழிறங்க முன்னரே
கதிரவனைப் பார்த்து
நடப்பு ஆண்டு
எண்ணங்களைப் பெருக்குவரே!
கதிரவனுக்குப் பொங்கிப் படைத்ததும்
பழையன கழிந்து, கெட்டவை ஒழிந்து
நன்மைகள் பல...
நமக்குக் கிடைக்குமென நம்பியே
எல்லோரும் கூடி உண்டு மகிழ்வரே!
நம்பிக்கைகள் தான்
எங்களுக்கு வழிகாட்டும்
ஒளி விளக்குகள்!
இவ்வாண்டுத் தையிலும்
நல்லன இடம்பெற, வெற்றிகள் குவிய
நம்பிக்கைகள் ஈடேற
உலகிற்கு ஓர் ஒளி முதல்வன்
எம்முடன் இருப்பானென நம்புவோம்!


புலிகள் அழிந்த பின்; ஈழப் போர் நின்ற பின்; வந்த 2010 தைப்பொங்கல் குறித்து எழுதிய பாவிது.

8 கருத்துகள் :

  1. நம்பிக்கைகள் தான்
    எங்களுக்கு வழிகாட்டும்
    ஒளி விளக்குகள்!

    பதிலளிநீக்கு
  2. உலகிற்கு ஓர் ஒளி முதல்வன்
    எம்முடன் இருப்பானென நம்புவோம்! //...

    நம்பிக்கை யில்லையேல் வேறு எதுவுமில்லை... அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. பழையன கழிந்து, கெட்டவை ஒழிந்து
    நன்மைகள் பல...
    நமக்குக் கிடைக்குமென நம்பியே
    எல்லோரும் கூடி உண்டு மகிழ்வரே!
    நம்பிக்கைகள் தான்
    எங்களுக்கு வழிகாட்டும்//

    பழையன க்ழிதலும்,புதியன புதலும் என்பது....ப்ஹைய நிகழ்வுகளை நினையாமல், அடுத்து நம் வாழ்வை எப்படித் தொடரணும் என்று புதிதாய் எண்ணி புதிய ஒரு வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குவதே!

    நல்ல கருத்து

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!