Translate Tamil to any languages.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

மக்களால் நன்கு அறியப்பட்டவனாக (பிரபலமாக)


என்னை
உங்களுக்கு
அதிகம் அறிமுகம் செய்பவர்கள்
என் எதிரிகளே...
எதிரிகள்
என்னைப் படிக்காதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் படித்ததைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை கள்ளச் சான்றிதழ் பெற்றவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது தகுதியின் படி
நேர்மையான சான்றிதல் எனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைக் கெட்டவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நல்லதைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் கள்ளன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நேர்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பெண்பிள்ளைப் பொறுக்கி என்பர்
ஆனால்
நீங்களோ
எனது கற்பைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பலரைக் காதலித்தவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனக்குக் காதலியில்லையெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பல மனைவிக்காரன் என்பர்
ஆனால்
நீங்களோ
என் மனைவி யாரெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அரசியல்வாதி என்பர்
ஆனால்
நீங்களோ
நான் மக்கள் தொண்டனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பொல்லாதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் நல்லவனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை இழிவுபடுத்துகையில் நம்பாமல்
நீங்களோ
என் சூழலைப் பகுப்பாய்வு செய்து
என் உண்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அழிக்க வருகையில்
நீங்களோ
என் உயிரைக் காத்த
என் சூழலிலிருந்த பொதுமக்களே!
எதிரிகளுக்குத் தெரியாதது
சான்று காட்டியே
இழிவுபடுத்த வேண்டுமென்று...
அதனாலன்றோ
என்னை
நீங்கள் பகுப்பாய்வு செய்ய முடிந்ததே
இதனாலன்றோ
உங்களுக்குள்ளே - நான்
அறிமுகமாக முடிந்திருக்கிறதே!
மக்களுக்குள்ளே என்னை இழிவுபடுத்தினால்
நான்
மக்களால் நன்கு அறியப்பட்டவனாவேனென
எப்ப தான்
எதிரிகள் படிக்கப் போகிறார்களோ
எனக்கும் தெரியவில்லையே!

14 கருத்துகள் :

  1. இவ்வளவு நன்மைகள் செய்யும் எதிரிகள் வாழ்க பல்லாண்டு !

    பதிலளிநீக்கு
  2. மக்களுக்குள்ளே என்னை இழிவுபடுத்தினால்
    நான்
    மக்களால் நன்கு அறியப்பட்டவனாவேனென
    எப்ப தான்
    எதிரிகள் படிக்கப் போகிறார்களோ//

    மிகச் சரியே! எதிரிகள் நல்ல விளம்பரதாரர்களே!

    பதிலளிநீக்கு
  3. ஆகா...எதிரிகளால் இவ்வளவு நன்மைகளா....

    புதுப்பா..புதுமை சொல்லிற்று

    பதிலளிநீக்கு
  4. ஆஹா எதிரிகளிடமும் நன்மையை பார்க்கும் உங்களது வரிகள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    அப்பாடி எவ்வளவு நண்மை....எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கும்
    அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      தமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. எதிரிகள் எப்படி அவர்களுக்கே தெரியாமல் நம்மை அடையாளப்படுத்துகிறார்கள் என்பதை , தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியது உங்கள் கவிதை!!! தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம்

    பதிலளிநீக்கு
  7. இனி நானும் கூடுதல் எதிரிகளை பெறும் வண்ணம் வாழ முயற்சிக்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!