Translate Tamil to any languages. |
புதன், 1 அக்டோபர், 2014
அழைப்பு விடுக்கின்றேன்!
எனக்கும்
என் மனைவிக்கும் இடையே
அடிக்கடி மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவைத் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
நல்ல அறிவுரை
பதிலளிநீக்குஉணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்கமாமல்
நன்மை தீமை, ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றை
அவதானித்து தாங்களே
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வது நல்லது
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பர்...
பதிலளிநீக்குசிலநேரங்களில் மனிதன் கெடுத்தவரம் ஆகி விடுகிறதே,,,,
மிகச் சரியே!
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நண்பரே! மிக நல்ல அறிவுரை. ஆனால் நமக்குத் தெரிந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டால்தானே! பல குடும்பங்களில் மறுக்கப்படுகின்றதே!
பதிலளிநீக்குஉண்மை தான் அறிஞரே!
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... அழுவதும் பெண்ணாலே..நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
கரப்பான் பூச்சிக்கு பயப்பட்ட பெண் என்று கட்டிக் கிட்டால் ,நம்மை பயமுறுத்த ஆரம்பித்து விடுகிறாளே ,ஒரு வேளை தலைஎழுத்து என்பது மாறாது என்பது இதுதானோ ?)
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தெளிந்து செய்தாலும்
பதிலளிநீக்குதெரியும் விதி பின்னர் தான்
சகோதர சகோதரிகள்
இறைவன் துணை நாடல் வேண்டும் இனிது.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.