குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்தால்
உள்ள குளவிகள் எல்லாம்
மெல்லச் சூழல் எங்கும்
பறந்து பறந்து கொட்டுமே!
மக்கள் குழுவிற்குள் சொல்லெறிந்தால்
கூடிய மக்கள் எல்லோரும்
தேடித் தேடியே எங்கும்
செய்தீயாப் பரப்புவதைக் காண்பீரே!
குளவிக் கூட்டுக்குக் கல்லெறிய முன்னும்
மக்கள் குழுவிற்குள் சொல்லெறிய முன்னும்
நம்மவர் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்
எப்பவும் பின்விளைவைக் கொஞ்சம் படிக்கலாமே!
Translate Tamil to any languages. |
வியாழன், 30 அக்டோபர், 2014
குளவிக் கூடும் மக்கள் குழுவும்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
எறிந்த கல்லும்
பதிலளிநீக்குசொல்லி வார்த்தைகளும்
அதன் வீரியத்தை...
காட்டாமல் போகாது..
விளைவை யறி
விவேகமாய் நட...
நல்ல செய்தி ஐயா. மிகவும் முக்கியமான ஒன்று இது.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
"எறிந்த கல்லும்
நீக்குசொல்லிய வார்த்தைகளும்
அதன் வீரியத்தை...
காட்டாமல் போகாது..
விளைவை யறி
விவேகமாய் நட..." என
பாவாலே பின்விளைவைக் கூறியமைக்கு
மிக்க நன்றி.
குளவிக்கு இருக்கிற ...மானம் வீரம்...கோபம்..எதுவும்...மக்களுக்கு இருந்திருந்ததா.... ??? இல்லேயே என்ற ஆதங்கம்தான் எனக்கு வருகிறது.
பதிலளிநீக்குமக்கள் குழுவிற்குள்ளே
நீக்குநாம் வீசும் சொல்லெறி
ஊரறிய, நாடறியச் செய்துவிடும்
என்றேன்...
குளவிக்கு இருக்கிற
மானம்... வீரம்... கோபம்...
எல்லாம் மக்களுக்கு இருக்கு - அது
பாதிப்புக்குள்ளான மக்கள்
பொங்கி எழுந்தால் தெரிய வரும்!
மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குஉண்மையான வரிகளைக்கொண்டு உன்னதமாய் புதுப்பா புனைந்துள்ளீர்கள்.!
நாவடக்கம் என்றும் நன்மை பயக்கும்.!
சொல்லும் சொற்களை சொல்லும் முன் யோசித்து சொன்னால் விளைவுகளை தவிர்க்கலாம்.! பகிர்வுக்கு நன்றி.!
என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என் எழுத்தை ஊக்கபடுத்தியமைக்கு நன்றி.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
"நாவடக்கம் என்றும் நன்மை பயக்கும்!
நீக்குசொல்லும் சொற்களை
சொல்லும் முன் யோசித்து சொன்னால்
விளைவுகளை தவிர்க்கலாம்!" என்ற
வழிகாட்டலை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
கல்லும் ,சொல்லும் நம் கைமீறி சென்றால் சிக்கல்தான் !
பதிலளிநீக்குஒரே வரிப் பாவாலே
நீக்குஉண்மையை உரைத்தீர்கள்!
மிக்க நன்றி.