Translate Tamil to any languages.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?


பாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலியல் (மன்மதக்கலை-Sex) என்பது சொல்லித் தெரிவதில்லை; மணமுடித்த இணையர்கள் தாமாகவே புரிந்து கொள்வதாகும். இந்த உண்மைக்குப் பின்னாலே பாலியல் (Sex) வெளியீடுகள் தேவை இல்லையே!

ஆயினும், எனது http://mhcd7.wordpress.com/ தளத்தில் உளவியலுடன் பாலியலும் (Sex) கலந்த மதியுரைகளே வழங்குகின்றேன். அதில் பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் இல்லையே! இவ்வாறான தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதால் தவறில்லை என்பேன்.

ஆனால், இன்று எந்த வலைத் திரட்டிகளைப் பார்த்தாலும் நிலைமை கவலைக்கு இடம் என்பேன். ஆங்காங்கே பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் கொண்ட தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதைப் பார்த்தால் நல்லதுக்கு இல்லைக் காணும்.

உண்மையில் பாலியல் (Sex) தளங்களை வலைத் திரட்டிகளில் இருந்து ஏன் ஒதுக்க வேண்டும்? அறிஞர்கள் பலர் நல்லறிவைப் புகட்ட, படைப்பாளிகள் பலர் நல்ல இலக்கியங்களைப் படைக்க எனப் பயன்தரும் நல்ல நோக்கங்களைக் கொண்ட வலைப்பூக்களை (Blogs) நிரல்படுத்தும் வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) தளங்களை நிரல்படுத்தினால் தீமைகள் தான் அதிகம்.

அறிஞர்களின், படைப்பாளிகளின் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் குப்பையிலே கொட்டிப்போட்டு, குப்பையிலே கிடக்க வேண்டிய பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தினால் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்கள் வலைத் திரட்டிகளை நாடமாட்டார்களே! இதனால், நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடுவோரைக் குப்பையிலே கொட்டிவிடுவதாக எண்ணலாம்.

எனவே, நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடும் பதிவர்களுக்கான வலைத் திரட்டி எது? பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தாத வலைத் திரட்டிகளே அவை! முடிவாக வலைத் திரட்டிகளும் வலைப் பதிவர்களும் இது பற்றிச் சிந்தித்தால் மட்டுமே நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு நிறைவு (திருப்தி) தரச் செய்யலாம். இல்லையேல் எல்லோருக்கும் கேடு தான் நிகழும்.

2 கருத்துகள் :

 1. நானும் நேற்று தமிழ்மணம் பார்த்து நொந்து போனேன். மாலையில் இந்த மின்மடலை தமிழ்மணத்திற்கு (admin@thamizmanam.com, ads@thamizmanam.com) அனுப்பினேன்.

  Sub : Whats up with Tamilmanam?

  பெண்ணுறுப்பை பராமரிப்பது எப்படி??
  செக்ஸை இரவில் பெண்கள் விரும்ப காரணம் என்ன?
  ஆண்களை சட்டென சுண்டி இழுக்கும் பெண்ணின் உறுப்பு எது தெரியுமா..?
  ஆண்குறி பிரச்சனைகள் - கணவனுக்கு ஒரு பிரச்சனை,அது மனைவிக்கும் ஆபத்து..!
  படுக்கையில் சொர்க்கத்தை காண வேண்டுமா??
  சுயஇன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை திருப்திபடுத்த ம
  காமசூத்ராம் சொல்லித்தரும் ஆண்களுக்கான ஆச்சரிய தகவல்..!

  ----------------------------------------------------

  ஒரு மின்னஞ்சலில் மேற்கண்ட தலைப்புகளை முதலில் காணவும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்குமல்லவா? தமிழ்மணத்தைப் பார்த்ததும் அதே அதிர்ச்சிதான் ஏற்பட்டது. தமிழ்மணம் ப்ளாக்கர்களுக்கான தளமா.. அல்லது சிவராஜ சித்தவைத்தியசாலையா என்ற ஐயம் ஏற்பட்டு விட்டது. ஒரே நாளில் முகப்பில் இத்தனையும் உட்கார்ந்திருக்கின்றன. சிறுவர்கள் உட்பட அனைத்து வயதினரும், குடும்பத்தில் உள்ள அனைவரும் புழங்கி வரும் தமிழ்மணம் இப்படி மலங்கள் கொட்டப்படும் குப்பைக்கூளமாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  விரைந்து சரிசெய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முயற்சிக்கும் கருத்துக்கும் என் இனிய பாராட்டுகள்.
   மிக்க நன்றி.

   நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!